டில்லியில் மீண்டும் ஊரடங்கு இல்லை

புதுடில்லி, நவ.18 டில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''டில்லியைப் பாதித்த கரோனா வைரஸின் மூன்றாவது அலை சமீப நாட்களில் நகரத்தில் உச்சம் அடைந்தது. ஆனால், தற்போது அது நம்மைக் கடந்துபோய்விட்டது. அக்டோபர் 28 ஆம் தேதி முதல் தினசரி உயர்வு முதல் தடவையாக 5ஆயிரம் எண்ணிக்கையைக் கடந்தது. கடந்த புதன்கிழமை 8ஆயிரம் எண்ணிக்கையை அடைந்தது. டில்லியில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்தாலும் மூன்றாவது அலையின் உச்சத்தைக் கடந்துவிட்டது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல முடியும். கரோனா வைரஸின் மூன்றாவது அலை நகரத்தில் உச்சம் கடந்துபோய்விட்டதால் டில்லியில் இனி மீண்டும் ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை'' என்றார்.


Comments