வீரமணி 'வாயை' - யாராலும் மூட முடியாது

கேள்வி: திராவிட கழகத் தலைவர் கி. வீரமணியின் பலம் எது, பலவீனம் எது?


பதில்: ஸ்டாலின் அவரை ஆதரிப்பது வீரமணியின் பலம், தேர்தலுக்கு முன் அவர் வாய்க்கு ஸ்டாலின் பூட்டும் போடுவது வீரமணியின் பலவீனம்.


- 'துக்ளக்' 11.11.2020 பக்கம் 14


திராவிட கழகத் தலைவர் அல்ல வீரமணி - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி. முதலில் எதையும் ஒழுங்காகக் கூறத் தெரிந்து கொள்ளட்டும்!


திராவிடர் கழகத்திற்கும், திமுகவுக்கும் புத்தி சொல்ல இவர் யார் என்று தெரியவில்லை - எந்தப் பார்ப்பனருக்கும் அந்த உரிமை இல்லை. திராவிட இயக்கம் முகிழ்த்ததே இந்த ஆரிய வருணாசிரம பூணூல் சனாதனக் கோத்திரங்களை எதிர்த்தே!


தி.க.வும் - தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று தி.மு.க.வின் நிறுவனர் அறிஞர் அண்ணா அவர்கள் கூறியதும் - ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தபோது, இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று சொன்னது எல்லாம் 'துக்ளக்' கும்பலுக்கு 'வசதியாக' 'சாமர்த்தியமாக' ம(¬)றந்து போய் விட்டதா?


பா.ஜ.க. என்னும் பார்ப்பனீய கட்சியைத் தவிர, தந்தை பெரியார், வீரமணி திராவிடர் கழகம் பக்கம்தான் தமிழ்நாடே இருக்கிறது.


'தி.க. தலைவர் வீரமணியோடு நெருக்கம் வேண்டாம் - விலகி நில்லுங்கள்! என்ற 'திமுக தலைவர் தளபதிக்கு குருமூர்த்தி எத்தனை முறை எழுதியிருப்பார்?   "திமுக வின் பயணத்தை முடிவு செய்வது பெரியார் திடல்தான்" என்று திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்த பிறகு - வெட்கம் கெட்ட மூளிகள் விவஸ்தை இல்லாமல் எழுதுவது வெட்கக் கேடே!


பத்து வயதில் மேடை ஏறி முழங்கிய வாய்க்கும், வாய்மைக்கும்  சொந்தக்காரர் வீரமணி. அவர் வாயைப் பூட்டுப் போட யாராலும் முடியாது - வீரமணி வாய் திறப்பது இந்த வெங்கண்ணா பரம்பரைகளுக்குப் பேராபத்தாக இருக்கிறது - அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்கிறது என்பது மட்டும் தெளிவாகவே புரிகிறது.


அக்கிரகார ஆந்தைகள் அலறுவதற்கு இதுதான் காரணம்!


 


Comments