பாலாற்றங்கரையில் நாகரிகம் தொடர்பான அகழாய்வுகள் மேற்கொள்ளப்படுமா

பாலாற்றங்கரையில் நாகரிகம் தொடர்பான அகழாய்வுகள் மேற்கொள்ளப்படுமா?காஞ்சிபுரம்,நவ.16, பாலாற்றங் கரையோரம் பல்வேறு கிரா மங்களில் பெருங்கற்கால மக்களின் நாகரிகம் சார்ந்த பல நினைவுச் சின்னங்கள் புதைந்து கிடக் கின்றன. இப்பகுதியில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் 4 ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் நிலையில் முதல்வர் அறிவிப்புக்கு பிறகாவது இப்பகுதியில் ஆய்வு நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.


ஆற்றங்கரைகளில்தான் மனிதநாகரிகங்கள் தோன்றி வளர்ந்தன. தென் மாவட்டங்களில் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி மூலம் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தை அறிந்துகொள்ள முடிந்தது. அதேபோல் மதுரை கீழடியிலும் தொல்லியல் அகழ் வாராய்ச்சிகள் நடைபெற்று வரு கின்றன. வடமாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட் டங்களில் உள்ள பாலாற்றங் கரையோரம் பல்வேறு நினைவுச் சின்னங்கள் உள்ளன. குறிப்பாக பாலூர் அருகே உள்ள சாஸ் திரம்பாக்கம், பழவேரி, புலிப் பாக்கம், பினாயூர் போன்ற இடங் களில் பெருங்கற்கால மக்களின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக் கும் பல்வேறு நினைவுச் சின் னங்கள் உள்ளன. இந்த 4 கிராமங் களில் முதுமக்கள் தாழிகள், கற்பதுக்கைகள் ஆகியவை அதிகம் காணப்படுகின்றன. இவை 4 ஆயி ரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை யாக இருக்கலாம் என்று வரலாற்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


தென்மாவட்டங்களில் நடை பெறுவது போன்ற தொல்லியல் ஆய்வுகள் இந்த பாலாற்றங் கரையில் நடைபெறாதது வர லாற்று ஆர்வலர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


சாஸ்திரம்பாக்கத்தில் முது மக்கள் தாழி, கற்பதுக்கைகளுடன், கற்கால மக்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள், மருந்து அரைக்கும் உரல்கள் போன்றவை காணப் படுகின்றன. இந்த முதுமக்கள் தாழிகளில் 6 அடி முதல் 15 அடி வரை உள்ள ஒரு குடுவை போன்ற வடிவத்தில் இறந்தவரின் உட லோடு அவர் பயன்படுத்திய பொருட் களையும் வைத்து பூமிக்கடியில் புதைத் துள்ளனர். இது போல் எண்ணற்ற நினைவுச் சின் னங்கள் இந்தப் பகு திகளில் புதைந் துள்ளன. இது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று தமிழர் தொன்மம் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில் தொல்லியல் துறைக்கும், மாவட்டநிர்வாகங் களுக்கும் மனு அளித்தனர்.


இதுகுறித்து தமிழர் தொன்மம்வரலாற்று ஆய்வு மய்ய ஒருங்கிணைப்பாளர் வெற்றித் தமிழன் கூறும்போது, "தொல் லியல் துறை அலுவலர் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிப்பார் என்று ஜனவரி மாதம் அந்த துறை யின் செயலர் மூலம் அறிவிக்கப் பட்டிருந்தது. முதல்வரும் கடந்த நவம்பர் மாதம் ‘தொல்லியல் ஆய்வுகள் வடமாவட்டங்களில் நடைபெறும்' என்று தெரிவித் திருந்தார். ஆனால், பாலாற்றங் கரை நாகரிகம் தொடர்பான ஆய்வுகள் நடத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் கூட எடுக் கப்படவில்லை. இதனால் அந்த நினைவுச் சின்னங்கள் அழியும் ஆபத்து உள்ளது" என்றார்.


Comments