மேம்பட்ட செயல்பாட்டிற்கான உயர்தர பெட்ரோல் அறிமுகம்

சென்னை, நவ. 19- இறக்குமதி யான உயர்தரக் கார்கள் மற் றும் பந்தயங்களில் கலந்து கொள்ளும் கூடுதல் திறன் கொண்ட இரு சக்கர வாகனங் கள் போன்றவற்றின் மேம் பட்ட செயல்பாட்டுக்கு  புதிய வகை பெட்ரோலை இந்துஸ் தான் பெட்ரோலியம் கார்ப் ரேஷன் அறிமுகம் செய்துள்ளது.


இதனை சென்னையில் மாநில தொழில்துறை அமைச் சர் எம்.சி.சம்பத் அறிமுகம் செய்து வைத்தார். இதில் ஆக் டேன் என்ற கரிம இரசாயன மூலக்கூறை அதிகம் கொண் டிருப்பதால், இந்த உயர்தர பெட்ரோல் மிகக் குறைந்த காற்று மாசுவை வெளியிடு வதோடு, வாகனங்களின் என் ஜினுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் ஆயுளை அளிக்கும். தேனாம்பேட்டையில் உள்ள சூப்பர் சர்வீஸ் நிலையம் மற்றும் மீனம்பாக்கத்தில் உள்ள கிருஷ்ணராஜ் & கோ ஆகிய இரு எச்.பி.சி.எல். பெட்ரோல் விற்பனை நிலை யங்களில் ‘பவர் 99’ உயர்தர பெட்ரோல் கிடைக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள் ளது.


தமிழகத்திலேயே முதன் முறையாக சென்னையில் அறிமுகப்படுத்தப்படும் இந்தப் ‘பவர் 99’ உயர்வகை பெட்ரோல் தமிழகத்தில் உள்ள இதர முக்கிய நகரங் களிலும், அடுத்த இரு ஆண்டு களில் அறிமுகம் செய்யப்படும் என்று எச்.பி. நிறுவனத்தின் தென் பிராந்திய சில்லறை விற்பனைப் பிரிவு தலைமைப் பொது மேலாளர்  சந்தீப் மகேஸ்வரி கூறினார்.


‘பவர் 99’ பெட்ரோல் அறி முகத்தை ஒட்டி செய்தியாளர் களிடையே பேசிய திரு சந்தீப் மகேஸ்வரி, இன்று சந்தை யில் உள்ள இவ்வகை பெட் ரோலில், ‘பவர் 99’ எனும் எங் களது பெட்ரோல் ரகத்தில் தான் மிக அதிக அளவு ஆக் டேன் இடம்பெற்றுள்ளது. இந்தப் பெட்ரோல் பயன் பாடு என்ஜினின் திறனை அதிகரிப்பதோடு, எரி பொருள் சிக்கனத்துக்கும் உதவுகிறது” என்றார்.


Comments