ஊற்றங்கரையில் அனைத்து கட்சியினர் வலியுறுத்தல்
ஊற்றங்கரை, நவ. 20- அண்மைக் காலமாக தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கார், திருவள்ளுவர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். சிலை கள் அவமரியாதை செய்யப் பட்டு வருகின்ற நிலையில், தலைவர்களின் சிலைகளுக் குக் கூண்டு போடுமாறு உத் தரவிடப்பட்டு, ஆங் காங்கே மக்களால் மதிக்கப்படும் தலைவர்களின் சிலைகளுக் குக் காவல்துறையினர் கூண்டு போட்டு வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக ஊற் றங்கரை பகுதிகளில் அமைந் துள்ள தலைவர்களின் சிலை களுக்கு கூண்டு அமைக்க காவல் துறையினரால் அறி வுறுத்தப்பட்டது
இதனையொட்டி திராவிடர் கழகம், திராவிடர் முன்னேற்றக் கழகம், விடு தலை சிறுத்தைகள் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் , மதிமுக, இந்திய குடியரசுக் கட்சி மற்றும் விடுதலை வாசகர் வட்டம், ஓய்வு பெற்ற அலுவலர் சங் கம், ஊற்றங்கரை தமிழ் சங் கம், ஊற்றங்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகளின் சார்பில் ஊற்றங்கரை நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் அமைந் துள்ள தலைவர்களின் சிலை களுக்கு கூண்டு அமைக்க காவல் துறையின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் முயற்சியை கைவிடக் கோரியும், ஊற்றங் கரை அனைத்துக் கட்சி சார் பில் தலைவர்களின் சிலைக ளுக்கு கூண்டு அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் கோரிக்கை மனு அளித்தனர்.
தலைவர்களின் சிலைக ளுக்கு பாதுகாப்பு என்கிற பெயரில் கூண்டு அமைத்து அவமரியாதை செய்வதை விட ஒவ்வொரு சிலைகளுக் கும் காமிரா பொருத்தி பாது காக்க வேண்டும் என அனைத்து கட்சியினர் சார்பில் வேண்டு கோள் விடுக்கப்பட்டது. அனைத்து கட்சியினரின் வேண்டுகோளை மிக உன் னிப்புடன் கேட்ட காவல் துணை கண்காணிப்பாளர் உய ரதிகாரிகளுடன் கலந்து பேசி ஆவண செய்வதாக கூறினார்.
காவல் துணை கண்கா ணிப்பாளருடன் நடைபெற்ற சந்திப்பில் திமுக ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல் வம், வ.சாமிநாதன், திமுக நகர செயலாளர் இர.பாபு சிவகுமார், ஊற்றங்கரை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் குமரேசன், மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஊற்றங் கரை பேரூராட்சி மேனாள் தலைவர் ஜெயலட்சுமி, திரா விடர் கழக ஒன்றிய தலைவர் செ.பொன்முடி, ஒன்றிய செயலர் செ.சிவராஜ், ஒன்றிய அமைப்பாளர் அண்ணா.அப்பாசாமி, விடுதலை வாச கர் வட்டச் செயலர் பழ.பிரபு, இந்திய குடியரசு கட்சியின் பொதுச்செயலர் எம்.சிவா, சிபிஅய் மாநில குழு உறுப் பினர் இரா.சேகர், சிபிஎம் வட்ட செயலர் எம்.மகாலிங் கம், வட்ட குழு உறுப்பினர் அண்ணாமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலர் அசோகன், நாடாளுமன்ற தொகுதி செயலர் வே.குபேந் திரன், சட்டமன்ற தொகுதி செயலாளர் தலித்.பிரபாக ரன், திமுக இணையதள பொறுப்பாளர் தணிகைகும ரன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் எஸ்.ஏ.காந்தன் ஊற்றங்கரை தமிழ்ச் சங்கப் பொருளாளர் இரா.பழனி, இந்திய குடியரசு கட்சியின் பொறுப்பாளர் சுபாஷ், விடு தலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் துரை.வளவன், ஜிம்.மோகன், கோவிந் தன், சூளகரை அம்பேத்கர், திமுக ஒன்றிய இளைஞரணி, மாணவர் கழக பொறுப்பா ளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் மற்றும் கட்சி களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.