பீகார் சட்டசபை தேர்தலில்  வெற்றி பெற்ற உறுப்பினர்களில் நான்கில் ஒருவர் உயர்ஜாதியைச் சேர்ந்தவர்

பாட்னா, நவ.15 2015 தேர்தலில் உயர் ஜாதியில் இருந்து 53 பேர் வெற்றி பெற்ற நிலையில், 243 பேர் கொண்ட சட்டசபையில் தற்போது 64 பேர் உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள்.


இதில் பாஜக-33, அய்க்கிய ஜனதா தளம்-9, விகாஸ் கட்சி-2, மாஞ்சியின் கட்சி-1 என தேசிய ஜன நாயகக் கட்சி யின் சார்பில் 45 உயர்ஜாதியினர் வெற்றி பெற்றுள்ளனர்.


இதேபோல, ஆர்.ஜே.டி.-8,  காங் கிரஸ்-8, சிபிஅய்-1 என 17 உயர்ஜாதியினர் மகாபந்தன் கூட்டணியில் வெற்றி பெற் றுள்ளனர். இது மட்டுமன்றி, பஸ்வான் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் சுயேச்சை ஒருவரும் உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள்.


சென்ற 2015 தேர்தலில் யாதவர்கள் 61 பேரும், குர்மி 16 பேரும், கோரி 20 பேரும் வெற்றி பெற்றனர். ஆனால், தற்போது யாதவர் 52, குர்மி-12, கோரி 16 என எண்ணிக்கை குறைந்துள்ளது.


முஸ்லிம் எண்ணிக்கையும் 2015 இல் 24 ஆக இருந்தது தற்போது 19 ஆக குறைந்துள்ளது.


பாஜக ஆதரவு சமூகங்களான வைஸ்யா / பனியா 2015 இல் 16 பேர் வெற்றி பெற்ற நிலையில் தற்போது 24 பேர் வெற்றி பெற்று நான்காவது பெரிய சமூகமாக சட்டமன்றத்திற்குச் செல்கின்றனர்.


சட்டமன்றத்தில் உயர்ஜாதியினர் 64, யாதவர்கள் 52, எஸ்.சி./எஸ்.டி, 40, வைசியர்கள் 24, முஸ்லிம்கள் 19 என்ற அளவில் பங்கு பெற உள்ளனர்.


('டைம்ஸ் ஆப் இந்தியா', 14.11.2020)


Comments