மாநில மொழிகளில் மத்திய அரசு தேர்வுகள் தெலங்கானா முதல்வர் வலியுறுத்தல்!

அய்தராபாத், நவ. 22-- மத்திய அரசின் போட்டித் தேர்வு களை மாநில மொழிகளில் நடத்த வேண்டுமென தெலங் கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வலியுறுத்தியுள்ளார்.


மத்திய அரசின் போட்டித் தேர்வுகள் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்படுகின்றன. இந் நிலையில், மாநில மொழிகளி லும் மத்திய அரசின் போட் டித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டுமென பிரதமர் நரேந் திர மோடிக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கடிதம் எழுதியுள்ளார்.


இந்த கடிதத்தில், “மத்திய அரசின் போட்டித் தேர்வு களை சந்திப்போரில், ஆங்கில வழியில் கல்வி பெறாதவர்க ளும், இந்தி பேசாத மாநிலங் களை சேர்ந்தவர்களும் பாதிக் கப்படுகின்றனர்.


இந்திய அரசின் துறைகளி லும், இந்திய அரசால் எடுத்து நடத்தப்படும் நிறுவனங்களி லும் (யூபிஎஸ்சி, ரயில்வே, பொதுத்துறை வங்கிகள், ரிசர்வ் வங்கி) வேலைவாய்ப்பு பெறுவதற்காக தேர்வு எழு தும் அனைத்து மாணவர்க ளுக்கும் சமமான, நியாயமான வாய்ப்பு அளிக்கப்பட வேண் டும்” என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.


தனது கடிதம் தொடர்பாக ஊடகவியலாளரைச் சந்தித்த சந்திரசேகராவ் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசு விற்பனை செய்ய திட்டமிட் டுள்ளதை  கடுமையாக விமர் சித்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து பேசிய சந்திர சேகர் ராவ், “இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொலை நோக்குப்பார் வையுடன் பொதுத்துறை நிறுவனங்களை நிறுவினார். இவையெல்லாம் நம் நாட் டின் பெருமை.


தான் ரயில் நிலையத்தில் டீ விற்றதாக மோடி கூறு கிறார். இப்போது இந்திய ரயில்வே துறையையே அவர் விற்கப்போகிறார். எல்ஐசி நிறுவனத்துக்கு 30 லட்சம் கோடி ரூபாய் சொத்துகள் இருக்கிறது. மேலும் 40 கோடி பாலிசிதாரர்கள் இருக்கின்ற னர்.


எல்அய்சி இந்தியாவின் பெருமை. இதுபோன்ற நிறு வனங்களை கார்ப்பரேட் டுக்கு விற்பதில் ஏதாவது புத் திசாலித்தனம் இருக்கிறதா?” என கேள்வியெழுப்பி யுள்ளார்.


Comments