செய்தியும், சிந்தனையும்....!

நல்லது செய்யாவிடினும் அல்லது செய்யாமல் இருக்கக் கூடாதா?


தீபாவளியின்போது கூட்ட நெரிசல். கரோனா பரிசோதனையை மேலும் அதிகரிக்கவேண்டும்: - மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத் துறை செயலாளர் அறிவுறுத்தல்.


மதப் பண்டிகைகள் நல்லது செய்யாவிடினும் கெடுதல் செய்யாமல் இருக்கக் கூடாதா?


அடுத்து கார்த்திகைத் திருவிழா, திருவண்ணாமலையில் தொடங்குகிறதாம்!


‘புனித' நீரா?


திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடக்கும் பஞ்சமி தீர்த்தவாரியில், 'புனித' நீராடத் தடை!


'புனித' நீரா - தூய்மை கெட்ட நீரா? என்பதை ஆய்வுக் கூடத்தில் சோதித்தால் தெரியும் சேதி!


கும்பகோணம் மகாமகம் நடந்த பிறகு அக்குளத்தின் நீரை சோதித்தபோது 25 சதவிகிதம் மலக் கழிவும், 40 சதவிகிதம் சிறுநீர்க் கழிவும் இருந்ததை மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லையா?


கள யதார்த்தம்!


தொகுதி பங்கீட்டில் தி.மு.க.வுடன் பேரம் இருக்காது: - காங்கிரஸ் முடிவு


யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் பக்குவமும், பண்பாடும் போற்றத்தக்கவையே!


கடவுளை வணங்குபவன்?


ஈரோடு அருகே ஒருவருக்கொருவர் மீது சாணி வீசி நேர்த்திக் கடன்!


கடவுளை வணங்குபவன் காட்டு மிராண்டி என்று சொன்னால் மூக்கின்மீது கோபம் காட்டுவோர் இதனை என்ன பெயரிட்டு அழைப்பார்களாம்?


Comments