அனைவருக்கும் தடுப்பூசி எப்போது

அனைவருக்கும் தடுப்பூசி எப்போது?: ராகுல் காந்தி கேள்வி


புதுடில்லி, நவ. 24- கரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 4 கேள்விகளை எழுப் பியுள்ளார். இதுதொடர்பாக ராகுல் நேற்று  (23.11.2020) தனது டிவிட்டர் பதிவில்,


‘‘1.கரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதனைத் தேர்வு செய்யும்? ஏன்? 2. கரோனா தடுப்பூசியை முதலில் யார் பெறுவார்கள்? அவர்களின் விநியோக உத்தி என்னவாக இருக்கும்? 3. கரோனா தடுப் பூசி இலவசம் என்பதை உறுதிப்படுத்த பி.எம். கேர்ஸ் நிதி பயன்படுத்தப்படுமா? 4. அனைத்து இந்தியர்களுக்கும் எப்போது தடுப்பூசி போடப் படும்? என்ற கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்’’ என்று ராகுல் வலியுறுத்தியுள்ளார்.


Comments