செய்தியும், சிந்தனையும்....!

பிழைப்பா - கொழுப்பா?


கேள்வி: 3500 ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்டதாகக் கூறப்படும் மனு சாஸ்திரம்பற்றி தற்போது பேசுவது தேவைதானா?


பதில்: 3500 ஆண்டுகளுக்குமுன்பு மனு இருந்ததால் இன்று திருமாவளவனால் அரசியல் பிழைப்பு நடத்த முடிகிறது. யாருக்கு மனு சாஸ்திரம் தேவையோ, இல்லையோ, அவருக்கு அது நிச்சயம் தேவை. மனுவுக்கு நன்றி கூறவேண்டியவர் திருமாவளவன். - 'துக்ளக்', 25.11.2020 (இன்று வெளிவந்தது).


மனுவை எதிர்த்துப் பேசுவது அரசியல் பிழைப்பு என்றால், இன்றளவும் மனுவைத் தூக்கிப் பிடிக்கும் 'துக்ளக்' கும்பல் நடத்துவது வயிற்றுப் பிழைப்பா? பார்ப்பனக் கொழுப்பா?


அப்பொழுதுகூட மனுவின் ஒரு குலத்துக்கொரு நீதியை பூணூல்கள் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என்பது அடிகோடிட்டுக் கவனிக்கத்தக்கதே!


அபச்சாரம்! அபச்சாரம்!!


சபரிமலை வந்த இரண்டு பக்தர்களுக்குக் கரோனா.


சபரிமலையான் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் வந்த பக்தர்களைத் தடுப்பது அபச்சாரம்! அபச்சாரம்! அசல் நாத்திக செயல்!


கோமியத்தில்


ஆராய்ச்சி


கரோனா தடுப்பூசிக்கு உலகமே இந்தியாவை எதிர்பார்க்கிறது: - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.


கோமியத்தில் மகத்தான மருத்துவ சக்தியின் கூறுகள் இருக்கிறதா? என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்களோ!


கை வைக்கத்


திட்டம்?


கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஜாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தலித் ஊராட்சித் தலைவர்களின் எண்ணிக்கை 16.


கரோனாவைவிட கொடுமையானது இந்த ஜாதி பேரபாயத் தொற்று. இந்தக் கிருமிக்கு மூலமாக இருக்கும் கடவுள், வேதங்கள், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள்மீது கை வைக்க என்ன திட்டம்?


வாக்காளர்கள் அறிவாளிகள் ஆகிவட்டனர்?


பீகார் தேர்தலில் மட்டுமின்றி, மத்திய பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கணிசமான இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. கரோனா மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சினைகளுக்கு பிரதமர் மோடியோ, பா.ஜ.க.வோ காரணம் இல்லை என்பதை வாக்காளர்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது இதனால் தெளிவாகிறது: - 'தினமலர்', தலையங்கம்


வாக்களித்த மக்கள் ஒவ்வொருவரும் பிரச்சினைகளின் அடிப்படையை ஆய்ந்து, தெளிந்து வாக்களிக்கும் நிலை ஏற்பட்டால் நல்லதுதான். அந்த நிலை வந்துவிட்டதா?


மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. தோற்று, காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்த நிலையில், இப்பொழுது அங்கு பா.ஜ.க. ஆட்சி நடப்பது எப்படி? கட்சி மாறிய ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் பா.ஜ.க. சார்பில் ரூ.10 கோடி அளிக்கப்பட்டது என்று, அந்தத் தொகையைப் பெற்றுக் கொண்டவரே பகிரங்கமாக சொல்லவில்லையா?


இவையெல்லாம் நியாயம் என்று உணர்ந்துதான் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது என்று 'தினமலர்' கூறுவதையும் ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டும் - அப்படித்தானே!


‘பாவ மன்னிப்பு!'


தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி சென்று 'சாமி' தரிசனம்!


பாவ மன்னிப்புகளுக்குக் கோவில்களும், 'புண்ணிய' நதிகளும்தான் இருக்கவே இருக்கின்றனவோ!


உச்சநீதிமன்றமா?


சங்கிகளா?


சபரிமலை நடை திறப்பு!


உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பெண்களை அனுமதிப்பார்களா?


Comments