பள்ளி திறப்பு குறித்து 9ஆம் தேதி கருத்து கேட்பு : தமிழக அரசு அறிவிப்பு


சென்னை,நவ.5, கரோனா இரண்டாம் அலை பரவும் என்று அச்சம் நிலவும் நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு பொதுமக்கள், பெற்றோர், அரசியல் கட்சி தலை வர்கள் மற்றும் அதிகாரிகள் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், தமிழகம் முழுவதும் 9ஆம் தேதி பள்ளிகளில் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப் படும் என்று பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.


பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப் பிட்டுள்ளதாவது:


தமிழகத்தில் தற்போது கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பெற்றோரும் கல்வியாளர்களும், உயர் வகுப்புகளுக்கு முன்னுரிமை வழங்கி பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.


பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய அரசு கடந்த 30ஆம் தேதி சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு மாநில அரசுகள் சூழ்நிலைக்கு ஏற்ப பள்ளி களை படிப்படியாக திறக்க அனு மதித்துள்ளது.


இருப்பினும் தமிழகத்தில் சுகா தாரத் துறை மற்றும் தொற்று நோய் சிறப்பு வல்லுநர் குழு, பேரிடர் மேலாண்மை துறை ஆகியவற்றுடன் கலந்து ஆலோசித்து 16ஆம் தேதி முதல் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.


மேலும், வரும் நாட்களில் கிறிஸ் துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் விடுமுறைகள் வருவதாலும், ஆன் லைன் மூலம் மாணவர்கள் படிப்பது நிறைவாக இருக்காது என்பதாலும், தேர்வை எதிர்கொள்ள வசதியாகவும், இருக்கும் என்பதால் பள்ளிகள் திறப் பது குறித்து அரசு முடிவெடுத்துள்ளது.


மேலும் அந்தந்த பள்ளி நிர்வாகத் துடன் கலந்து ஆலோசித்து பள்ளி களை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கெனவே பெற் றோர், கல்வியாளர்கள் கருத்துகள் அரசால் பெறப்பட்டு பரிசீலிக்கப் பட்டு இருந்த போதிலும், பள்ளிகளில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பெற்றோர், தனியார் பள்ளிகள் நிர்வாகம் ஆகியோரின் கருத்து கேட்க 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலை மையில் நடக்க உள்ளது.


இந்த கருத்து கேட்பு கூட்டங்களில் 9,10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரி விக்கலாம். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் அந் தந்த பள்ளிகள் திறப்பது குறித்து அரசு முடிவு எடுக்கும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Comments