டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
- அமெரிக்காவில் இன்று நடைபெறும் அதிபர் தேர்தலில் டிரம்ப் - ஜோடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
- உ.பியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்காமல், லவ் ஜிகாத் பற்றி முதல்வர் யோகி பேசுவது, பிரச்சினையை திசை திருப்பும் செயல் என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
- நியூசிலாந்து நாட்டு அமைச்சரவையில் முதன் முறையாக சென்னையில் பிறந்த இந்திய வம்சாவளி பெண் பிரியங்கா அமைச்சராக பொறுப்பேற்கிறார்.
- மத்திய பிரதேசத்தில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவர், அப்பெண்ணுக்கு ‘ராக்கி’ கட்ட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கில் மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணு கோபால், இது போல் நாடகங்கள் நடத்தக்கூடாது. நீதிபதிகளுக்கு பெண்களுக்கு எவ்வாறு நீதி வழங்க வேண்டும் என்ற புரிதலை உணர்த்த வேண்டும் என கூறியுள்ளார்.
- மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ் நாடு காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் ஏர்க் கலப்பைப் பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பார் என மா நில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- ராம் விலாஸ் பஸ்வான் மரணம் சந்தேகத்தை உருவாக்கி யுள்ளது. அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என நிதிஷ்குமார் கட்சிக் கூட்டணியில் உள்ள ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா கட்சியின் தலைவர் ஜிதன் ராம் மஞ்சி கூறியுள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- ராஜஸ்தானில் இட ஒதுக்கீடு கோரி ரயில் மறியல் செய்யும் குஜ்ஜார் போராட்டத் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு வரும்படி அம்மாநில முதல்வர் அசோக் கேலாட் அழைப்பு விடுத்துள்ளார்.
குடந்தை கருணா
3.11.2020