தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 88ஆம் பிறந்தநாள் விழா

விடுதலை சந்தா வழங்கிட தஞ்சை மாநகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துரையாடலில் முடிவுதஞ்சாவூர் மாநகர, ஒன்றிய திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 12.11.2020 மாலை 5 மணிக்கு தஞ்சை பெரியார் இல்லத்தில் 'நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமை வகித்து உரையாற்றினார். கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாநில பக தலைவர் மா.அழகிரிசாமி, மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், செயலாளர் சு.முருகேசன், தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர் பா.சுதாகர், செயலாளர் கா.அரங்கராசு, உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.


நவம்பர் 28ஆம் தேதி வருகை தரும் கழகப் பொதுச்செயலாளரிடம் தஞ்சை ஒன்றியம், மாநகரம் சார்பில் 100 விடுதலை சந்தா வழங்குதல்


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை அரங்க நிகழ்வாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.


Comments