கன்னியாகுமரி விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழனி சங்கர நாராயணன் இறுதி நிகழ்ச்சி


கன்னியாகுமரி, நவ. 25- பெரியார் பெருந்தொண்டர், திராவிடர் கழக மேனாள்  தலை மைச் செயற்குழு உறுப்பினர்  நாகர்கோவில் வடிவீசுவரம்  ப.சங்கர நாராயணன் _அருணா சங்கரன் ஆகியோ ரது மகனும் கன்னியாகுமரி மாவட்ட விடுதலை வாசகர் வட்ட செயலாளருமான பழனி சங்கர நாராயணன் அவர்கள் (வயது 55) 15.11.2020  அன்றுமாலை 4.30 மணியள வில் திடீர் மாரடைப்பு கார ணமாக மறைவுற்றார்கள்.


அவரது இறுதி நிகழ்வுகள் அடுத்தநாள் மாலை 3 மணிக்கு நாகர்கோவில் வடிவீசுவரத் தில்  உள்ள அவரது இல்லத் தில் நடந்தது. திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மறைவுற்ற பழனி சங்கர நாராயணன் அவர்களின் தாயார் அருணா அம்மையார், சகோதரர் அழகரசு ஆகியோரிடம் தொலை பேசி மூலம் ஆறுதல் கூறினார்கள். ஆசிரியர் அவர் கள் எழுதிய இரங்கல் அறிக் கையினை தோழர்கள் பழனி சங்கர நாராயணன் அவர்க ளின் குடும்பத்தினரிடம் வழங்கினர். குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் எம்.எம். சுப்பிரமணியம் மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந் தன் ஆகியோர்  மாலை வைத்து வீரவணக்கம் செலுத்தினர். 


கழக பொதுக்குழு உறுப் பினர் ம.தயாளன், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், இலக்கிய அணி செயலாளர் பொன்னுராசன், தொழிலாளர் அணி செயலா ளர் ச.ச.கருணாநிதி, மாநகர துணைத் தலைவர் கவிஞர் ஹ.செய்க் முகமது, கிளை செயலாளர் பி.கென்னடி அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செய லாளர் குமாரதாஸ், மகளிர் பாசறை செயலாளர் மஞ்சு குமாரதாஸ் ஆகியோர் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  அன்னாரின் இழப்பால் தவிக்கும்   தாயார்  அருணா சங்கரன்  வாழ்விணையர் சுதா பழனி, மகள்  சங்கரி மரு மகன் ரசல், சகோதரர் அழகரசு ஆகியோர்களுக்கு ஆறுதல் களை தெரிவித்துக் கொண்ட னர்.


Comments