மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடத் திட்டம் நீக்கப்பட்டதைக் கண்டித்து  திராவிட மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, நவ. 22- திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்திலிருந்து எழுத்தாளர் அருந்ததிராய் எழுதிய "வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்" புத்தகம் நீக்கப்பட்டதைக் கண் டித்தும், கல்வித் துறையில் காவிக் கும்பலின் தலையீட்டைக் கண்டித்தும், கருத்துரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தியும், திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் நேற்று (21.11.2020) காலை 10.30 மணியளவில் திருநெல்வேலி ரயிலடி சந்திப்பில் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் பாட புத்தக மாக இருந்த பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் எழுதிய "Walking with the Comrades"எனும் துணைப் பாட நூலை, ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்த ஒரே காரணத்தால் பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் இருந்து நீக்கியது வன்மை யாகக் கண்டிக்கத்தக்கது என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 12.11.2020 அன்று கண்டன அறிக்கை விடுத்தார்.


இதைக் கண்டித்து 21.11.2020 அன்று நெல்லை ரயிலடி சந்திப்பு அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கழகத் தலைவர் 12.11.2020 அன்று விடுத்த கண்டன அறிக்கையில் குறிப்பிட்டார்.


இதன்படி நடைபெற்ற கண்டன ஆர்ப் பாட்டத்தில் மண்டல மாணவர் கழகச் செயலாளர் அ.சவுந்திரபாண்டியன் அனை வரையும் வரவேற்றார். மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் மா.பால்இராசேந்திரன், மண்டலச் செயலாளர் அய்.இராமச்சந்திரன், நெல்லை மாவட்டத் தலைவர் இரா.காசி, நெல்லை மாவட்டச் செயலாளர் ச.இராசேந்திரன், தூத்துக்குடி பெரியார் மய்யம் பொறுப்பாளர் சு.காசி, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மு.முனிய சாமி, கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் எம்.எம்.சுப்ரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன், மாவட்டச் செயலாளர் வே.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மண்டலத் தலைவர் மா.பால்ராசேந்திரன் தொடக்கவுரையாற்றினார். நிகழ்வில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்பு செயலாளர் மதுரை வே.செல்வம், மாநில மகளிரணி அமைப்பாளர் சி.கிருஷ்ணேஸ்வரி, மாநில மாணவர் கழக துணை செயலாளர் ஸ்டார் நா.ஜீவா, மாநில துணை அமைப்பாளர் மருத்துவர் க.கதிரவன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.


ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர்


நெல்லை மாவட்ட அமைப்பாளர் ந.குண சீலன், வள்ளியூர் நகரச் செயலாளர் செ.ரமேஷ், மகளிரணி ர.நம்பித்தாய், ர.சவுமியா, சு.ஜான்சி ஜெயமலர், த.தங்கம், சு.சுமித்சா, சி.சித்ரா, ம.தேன்மொழி, இரா.உமா, மருத்துவர் இரா.மணிமொழி, பி.அன்னபுஷ்பம், டே.பாக்கியதாய், அ.கலா, மிக்கலம்மாள், தென்காசி டி.சேகர் பொன்ராஜ், ச.மணிவண்ணன், க.பொன்னுசாமி, பி.பொன்ராஜ், சே.இளவரசன், சு.இனியன், தே.ம.அமுதன், சு.செழியன், தே.தயாளன், த.குணாளன், அ.வளன், ஜோ.சீரன், ஜோ.தமிழினி, மு.தமிழினி, மு.சுதன், பா.முருகேஷ், அ.லெனின், தா.பெரியதங்கம், சே.ந.வள்ளி, மா.தேவப்பிரியா, து.வெங்கடேசன், மு.விவேக் குமார், ஜா.மதுரைவீரன், ச.சற்குணம், நாத்திக பொன்முடி, அருண்மணி மற்றும் ஏராளமான தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஒலி முழக்கமிட்டனர்.


Comments