டிரம்ப் நிர்வாகத்தின் விசா கெடுபிடிகளால் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சரிவு


வாசிங்டன், நவ. 18- அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் பிற நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 42 விழுக்காடு குறைந்துள்ளது. அதில், 2019-2020 ஆண்டு பயிலும் இந்திய மாணவர் களின் விகிதம் 4.4 விழுக்காடாக சரிவ டைந்துள்ளதாக ஆய்வுத்தகவல் வெளி யாகியுள்ளது.


2018--2019 ஆம் கல்வி ஆண்டில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 14 ஆக இருந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2019--2020 ஆம் கல்வி ஆண்டில் ஒரு லட்சத்து 93ஆயிரத்து 124 ஆகிவிட்டது. அமெரிக்காவில் பயிலும் இந்திய மாண வர்களின் எண்ணிக்கை 4.4 விழுக்காடாக  குறைந்துவிட்டது.


அமெரிக்க அதிபராக பதிவி வகித்த டிரம்ப் நிர்வாகத்தின் விசா கெடுபிடிகள், புலம்பெயர்வோருக்கு எதிரான கொள் கைகள் உச்சமடைந்ததன் காரணமா கவே  2019--2020 ஆம் கல்வி ஆண்டில் மட்டும் மாணவர்கள் சேர்க்கை எண் ணிக்கை 8ஆயிரத்து 890ஆக குறைந்து விட்டது. 2017--2018ஆம் கல்வி ஆண்டில் அமெரிக்காவிலுள்ள பல்கலைக் கழகங் களில் கல்வி பயின்ற மாணவர்களின் எண்ணிக் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 271 ஆக இருந்துள்ளது.


அமெரிக்க அரசின் பங்களிப்புடன் இயங்கும் பன்னாட்டு ஆய்வு நிறுவன மான இன்டர்நேசனல் இன்ஸ்டிடியூட் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இத்த கவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2020 ஆம் ஆண்டில் இந்திய மாணவர் களின் எண்ணிக்கை குறைந்ததைப்போல், 2021 ஆம் ஆண்டிலும் மேலும் குறையும் வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்திய மாணவர்களின் எண் ணிக்கை சரிவு குறித்து தெளிவாக வெளி யாகாத நிலையில், அவ்வெண்ணிக்கை மேலும் சரியும் என்று தெரிகிறது.


அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பயிலும் ஒரு மில்லியன் வெளிநாட்டு மாணவர்களில் அதிகமான அளவில் பயிலும் சீன மாணவர்கள் முதலிடத்தில் 35 விழுக்காட்டினராக உள்ளனர்.  இரண்டாமிடத்தில் 18 விழுக்காட்டின ராக இந்திய மாணவர்கள் உள்ளனர்.


ஆய்வின்படி, 700 கல்வி நிறுவனங் களில் 90 விழுக்காட்டு மாணவர்கள் அடுத்த ஆண்டில் கல்வி பயில உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே, அமெ ரிக்காவிலேயே வசித்துவரும் வெளி நாட்டு மாணவர்கள் 28 விழுக்காட்டினர் நேரடியாக வகுப்புகளுக்கு செல்ல முடி யாதவர்களாக உள்ளனர்.


Comments