குடந்தையில் 77 விடுதலை சந்தா

குடந்தை கழக மாவட்டத்தில் 15.11.2020 ஞாயிறன்று கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் குடந்தை மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, மாவட்டச் செயலாளர் உள்ளிக்கடை துரைராசு, தஞ்சை மண்டல செயலாளர் க.குருசாமி, மாநில விவசாயத்  தொழிலாளரணி செயலாளர் இரா.கோபால், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் உள்ளிட்டோர் விடுதலை சந்தா சேர்ப்பு பணியில் ஈடுபட்டனர்.


காலை 10 மணிக்கு திருநாகேஸ்வரத்தில் தொடங்கி, கல்யாணபுரம், திருவிடைமருதூர், நரசிங்கன்பேட்டை, துகிலி,  கதிராமங்கலம், சோழபுரம், மேலக்காவேரி, கும்பகோணம், பட்டீஸ்வரம், கோவிந்த குடி,  கபிஸ்தலம், பாபநாசம்,  ராஜகிரி ஆகிய ஊர்களுக்குச் சென்று இரவு 8 மணிக்கு அய்யம்பேட்டையில் சந்தா திரட்டும் பணி முடிவடைந்தது. 10 மணி நேரத்தில் 77 விடுதலை சந்தா, 4 உண்மை சந்தா, 2 பெரியார் பிஞ்சு சந்தா, 2 மாடர்ன் ரேஷனலிஸ்ட் சந்தாக்கள் சேகரித்து ரூ.1,13,180 வழங்கினர். அனைத்து பகுதிகளிலும் மாவட்ட ஒன்றிய நகர, கிளைக்கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் அன்புடன் வரவேற்று சந்தாக்களை வழங்கினர். அனைத்து கட்சி நண்பர்களும் இன்முகத்துடன் சந்தாக்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது. சந்தா சேகரிக்க சென்ற போது பல்வேறு கட்சியினர் இயக்கத்தின்மீதும், தமிழர் தலைவர்மீதும் மாறாத பேரன்பு கொண்டிருந்ததை காணும்போது மிகுந்த உணர்ச்சி வயப்பட்டோம். இயக்கத்தின் பணி அனைவரையும் சென்றடைந்துள்ளது என்பதை உணர முடிந்தது.


Comments