உலக அளவில் இலஞ்சத்தில் இந்தியா 77 ஆவது இடம்

புதுடில்லி, நவ.23 உலக அளவில் இலஞ்சத்தில் இந்தியா 77 ஆவது இடத்தில் உள்ளதாக இலஞ்ச ஒழிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.


அமெரிக்காவின் மேரி லாந்து மாகாணத்தில் அன் னாபொலிஸ் நகரில் இலஞ்ச ஒழிப்பு அமைப்பான டிரேஸ் இலஞ்ச இடர் மேட்ரிக்ஸ் அமைப்பு, அரசுடன் தொழில் தொடர்புகள், இலஞ்ச ஒழிப்பு மற் றும் அமலாக்கல், அரசு மற்றும் சமூக சேவை வெளிப்படைத்தன்மை, ஊட கங்கள் உள்ளிட்டவற்றின் சமூக மேற்பார்வை திறன் ஆகிய 4 காரணிகளின் அடிப் படையில் உலகளவில்இந் தியா உள்ளிட்ட 194 நாடு களில் தொழில்களில் நில வும் இலஞ்சத்தை மதிப் பிட்டு பட்டியலிட்டு வரு கிறது.


இந்தஆண்டுக்கானபட் டியல் வெளியாகி உள் ளது. இதில் இந்தியா 45 புள்ளிக ளுடன் 77- ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பட் டியலில் இந்தியா 48 புள்ளி களுடன் 78 ஆவது இடத்தில் இந்தியா இருந்தது.


இந்த ஆண்டு தரவுகள் படி, வடகொரியா, துர்க் மேனிஸ் தான் ஆகியவை தொழில் ரீதியிலான இலஞ்ச ஆபத்தை அதிகம் கொண்டுள்ளன.


 


Comments