வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 6.10 கோடி வாக்காளர்கள்: ஆண்களைவிட பெண்களே அதிகம்

சென்னை, நவ. 17- தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத் தில் 6கோடியே 10லட்சத்து 44ஆயி ரத்து 358 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்  வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.


மொத்தமுள்ள 234 தொகுதிகளில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகு தியில் தான் அதிக  வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். வரும் டிசம்பர் 15ஆம் தேதி வரை பெயர்களை சேர்க் கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள் ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண் டும் அக்டோபர் மாதம் வரைவு வாக் காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த ஆண்டு கரோனா காரணமாக ஒரு மாதம்  தாமதமாக வரைவு வாக் காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, நேற்று பகல் 11.30 மணிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  சென்னை, தலைமை செயலகத்தில் வரைவு வாக்காளர் பட் டியலை வெளியிட்டார்.  பின்னர் அவர் செய்தியாளர்களி டம் கூறியதாவது:


அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் (மாவட்ட ஆட்சியர் கள்) வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று வெளியிட்டனர். அதன்படி, பொதுமக்கள் தங்கள்  பெயர் வாக்கா ளர் பட்டியலில் இருக்கிறதா என் பதை elections.tn.gov.in என்ற இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ள லாம் அல்லது  பொதுமக்கள் வாக்க ளிக்கும் மய்யங்களில் (பள்ளிகளில்) வரைவு வாக்காளர் பட்டியல் வைக் கப்பட்டுள்ளது. அங்கு சென்று பெயர் உள்ளதா என்பதை  உறுதி செய்யலாம். பெயர் இல்லை என்றால் மீண்டும் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டும். வரைவு வாக்காளர் பட்டி யல் அனைத்து அரசியல் கட்சிக ளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில், இன்றைய தேதிப்படி மொத்தம் 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 வாக்காளர்கள் உள் ளனர். இதில் ஆண்கள் 3கோடியே 1லட்சத்து 12ஆயிரத்து 370பேர்,  பெண்கள் 3கோடியே 9 லட்சத்து 25ஆயிரத்து 603 பேர், மூன்றாம் பாலினத்தவர் 6ஆயிரத்து 385 பேர் உள்ளனர்.


தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டம் சோழிங்க நல்லூர் தொகுதியில் 6லட்சத்து 55ஆயிரத்து 366 வாக்காளர்கள் உள் ளனர். இதில் ஆண்கள் 3லட்சத்து 29ஆயிரத்து 420, பெண்கள்  3லட் சத்து 25ஆயிரத்து 858, மூன்றாம் பாலினத்தவர் 88 ஆகும். குறைந்த பட்சமாக கீழ்வேளூர் தொகுதியில் 1லட்சத்து 73ஆயிரத்து 107 வாக் காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 84 ஆயிரத்து 902 பேரும்,  பெண்கள் 88 ஆயிரத்து 205 பேரும் உள்ளனர்.


தமிழகத்தில் 1.1.2021ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் தங்கள் பெயர் களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க இன்று (நேற்று) முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை தாலுகா அலுவ லகம், மண்டல அலுவலகத்தில்  விண் ணப்பிக்கலாம். அலுவலகம் செல்ப வர்கள் வசதிக்காக 21.11.2020, 22.11.2020 மற்றும் 12.12.2020, 13.12.2020 ஆகிய 4 நாட்கள் (சனி, ஞாயிறு)  அனைத்து வாக்குச்சாவடி மய்யங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும். அன்றைய தினம் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய  விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தில் வண்ண புகைப்படம் ஒட்டி சமர்ப்பிக்க வேண் டும். 18 வயது முதல் 25 வயதுக்குள் இருப்பவர்கள் வாக்காளர் பட்டி யலில் பெயர் சேர்க்க பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் வயது சான்றிதழ் சமர்ப்பிக்க  வேண்டும். வீட்டு முகவ ரிக்கு ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வங்கி புத்தகம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, காஸ் ரசீது, பான்கார்டு உள்ளிட்ட  ஏதாவது ஒன்றின் நகலை வழங்க வேண்டும்.


ஆன்லைன்  (<www.nvsp.in.http://voterportal.eci.gov.in>) மற்றும் வோட்டர் ஹெல்ப் லைன்  எனும் செல்பேசி செயலியைப் பயன்படுத்தி பெயர் சேர்க்கவோ, நீக்கவோ செய் யலாம். வெளிநாட்டுவாழ் இந்தியர் கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க  படிவம் 6ஏ சமர்ப்பிக்க வேண்டும். டிசம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் நபர்கள் குறித்து வாக்குச்சாவடி அதிகாரிகள் வீடுகளுக்கு நேரில் வந்து  விசாரணை நடத்தி, தகுதியான வாக் காளர்கள் பெயர்கள் இறுதி வாக் காளர் பட்டியலில் சேர்க்கப்படும். தமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய இறுதி  வாக்காளர் பட்டியல் ஜனவரி 20ஆம் தேதி வெளியிடப் படும் என்றார்.


Comments