ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:  • மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு, லவ் ஜிகாத் சட்டம் கொண்டு வர முனைவது, பிற்போக்குத்தனமானது. அரசமைப்புச் சட்டம் இருக்கும்வரை, இது போன்ற சட்டங்கள் கொண்டு வந்தாலும் நிலைக்காது. மாநிலத்தில் மக்களுக்கான நல திட்டங்களை செயல்படுத்தாமல் இது போன்ற மக்களை பிளவு செய்யும் நடவடிக்கைகளை நிறுத்திட மத்திய அரசு முயல வேண்டும் என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • காஷ்மீரில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி, மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து உருவாக்கிய குப்கார் பிரகடனம், அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை மீண்டும் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை உறுதி செய்திட வேண்டும் என தலையங்கச் செய்தி கூறுகிறது.

  • பீகார் தேர்தலில் தங்கள் கட்சியின் சார்பில் முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற பாஜகவின் கனவு சிதைக்கப் பட்டுள்ளது. ஆட்சியில் இருந்தாலும், மிகவும் பின் தங்கிய மாநிலமான பீகாருக்கு எந்தவித நன்மை ஏற்படப் போகிறது? என மூத்த பத்திரிக்கையாளர் ஆனந்த் கே.சகாய் தனது கட்டு ரையில் குறிப்பிட்டுள்ளார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:  • ராஜஸ்தான் மாநிலத்தில் ஜாட் சமூகத்தினர்க்கு இட ஒதுக்கீடு தரப்படுவது போல், மத்திய அரசிலும் இட ஒதுக்கீடு தரப்படும் வகையில் மத்திய அரசின் ஓபிசி பட்டியலிலும் ஜாட் சமூகத்தினர் இட பெற வலியுறுத்தி,   போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:  • தமிழ் நாட்டில் மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு இடங்கள் பெற்ற 18 மாணவர்கள், பல முறை நீட் தேர்வு எழுதிய வர்கள் ஆவர்.


தி இந்து:  • கரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காக கேள்விகள் தயாரிக்கப்பட்டு விட்டன. எப்போது பணிகள் துவங்கும் என ரிஜிஸ்திரார் ஜெனரல் அலுவலகம் தெரிவிக்கவில்லை என்பது தகவல் அறியும் சட்டம் மூலமாக செய்திகள் கிடைத்துள்ளது.

  • பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அரசில் எட்டு அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது என ஜன நாயக சீர்த்திருத்திற்கான சங்கம் தெரிவித்துள்ளது.


தி டெலிகிராப்:  • மத்திய பிரதேசத்தில் பசுவைக் காப்பாற்றுவதற்காக தனி அமைச்சரவையை பாஜக அரசு அமைத்துள்ளது.

  • பீகாரில் நிதிஷ்குமார் அமைச்சரவையில் கல்வி அமைச் சராக நியமிக்கப்பட்டுள்ள மேவலால் சவுத்ரி, பேராசிரியர் பதவி களுக்கும், அரசுக் கட்டிடங்கள் கட்டுவதில் ஊழல் செய்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டு தற்போது பிணையில் வந்தவர் என ஆர்.ஜே.டி.கட்சியின் தலைவர் தேஜஸ்வி குற்றம் சாட்டியுள்ளார்.


குடந்தை கருணா


19.11.2020


Comments