கடத்தூர் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் சிறப்பாக நடைபெற்ற ‘மனிதநேயமற்ற மதங்கள்' கருத்தரங்கம்


தருமபுரி, நவ. 23- தருமபுரி மாவட்டம் கடத்தூர் விடுதலை வாசகர் வட்டத் தின் சார்பில் இரண்டாவது மாத நிகழ்வாக 21-.11.-2020 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் கடத்தூர் தமிழ்ச்செல்வி அச்சகம் முன்பாக ‘மனிதநேயமற்ற மதங்கள்’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற் றது.


நிகழ்ச்சிக்கு விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.தனசேகரன் தலைமை தாங்கினார். மண்டல் தலைவர் அ.தமிழ்ச்செல்வன் வர வேற்று பேசியதுடன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார். மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மாரி.கருணாநிதி, மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி செயலாளர் பிரபாகரன், மாணவர் கழக மாநில துணை செயலாளர் யாழ்திலீபன், ஒன்றியத் தலைவர் பெ.சிவலிங்கம், நகரத் தலைவர் சுப.மாரிமுத்து ஆகி யோர் முன்னிலை ஏற்றனர்.


மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன் கருத்துரையாற் றினார். ‘மனிதநேயமற்ற மதங்கள்’ என்னும் தலைப்பில் மாநில பகுத்தறி வாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா.சரவணன் உரையாற்றினார்.


அவரது உரையில் விடுதலை தோற்றமும் வளர்ச்சியும், விடுதலை இதழ் சமூகத்தில் ஏற்படுத்திய மாற் றங்கள், மதங்கள் மனிதனுக்கு ஏற்படுத்திய சீர்கேடுகள், இன்றைக்கு மதம் மனிதனை ஆட்கொண்டு ஆட்டிப் படைப்பது, மதம் அரசிய லாக்கி நாசப்படுத்துவதுடன் அவர் களை அறியாமை மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பதையும் அதற்கு ஒரே தீர்வு தந்தைபெரியார் கொள்கையை யும், ஆசிரியர் வீரமணி அவர்களின் வழிகாட்டுதலும், விடுதலையைப் படிப்பதும், அதனை பரப்புவதுமே தீர்வாகுமென்றார்.  அதனால் ஒவ் வொருவரும் விடுதலையை தவறாமல் வாங்கி படிப்பதுடன், மற்றவர்களும் படிக்க வைத்து தெளிவடைந்த பின் அதை மக்களிடம் கொண்டு செல் லுங்கள் என்று ஒரு மணி நேரத்துக்கும் கூடுதலாக சிறப்புரையாற்றினார் அண்ணா சரவணன்.


கலந்து கொண்டோர்


சோ. பாண்டியன் திமுக, தாள நத்தம்  ஊராட்சி துணைத் முனுசாமி, சிந்தல்பாடி மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் கோ. குபேந்திரன், கோ.முருகன், கு.பாலகிருஷ்ணன் பவுத்த நெறியாளர், ஆசிரியர் ஜீவிதா, தலைமையாசிரியர் இந்திரா காந்தி, பவுத்த நெறியாளர்கள் மாதையன், சிவகாமி, குமுதா,  செந்தமிழன், தாழை குமார் குமார்,கிராம நிர்வாக அலுவலர் அரவிந்தன், உடற்கல்வி ஆசிரியர் நா. மேகநாதன்,ஆசிரியர் கோபால்,கணினி இயக்குனர் போ.தங்கராஜ், ஆசிரியர் குப்புசாமி, கோவிந்தராஜ் மதிமுக, உடற்கல்வி ஆசிரியர் மூ. சிவகுமார், உதயகுமார், வேப்பிலைப்பட்டி மாணவர் கழகத் தோழர்கள் இ.சமரசம், ப.பெரியார், சு.தமிழன்பன் உட்பட 35க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டு சிறப் பித்தனர்.


தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்களுடைய 88ஆம் ஆண்டு  பிறந்தநாளை முன்னிட்டு மூன்றாவது மாதம் விடுதலை வாசகர் வட்டத்தை வேப்பிலைப்பட்டியில் கருத்தரங்கம் குடும்ப விழாவாக சிறப்பாக நடத் துவது என முடிவு செய்யப்பட்டது. கருத்தரங்கத்திற்கு வருகை தந்தவர் களிடம் பெரியார் புத்தகங்கள் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இறுதியாக சிந்தல்பாடி மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் குபேந்திரன் நன்றி கூறினார்.


Comments