குடந்தை மாவட்டத்தில் பல்வேறு கட்சியினர் வழங்கிய 54 விடுதலை சந்தா (ரூ.66,100) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 29, 2020

குடந்தை மாவட்டத்தில் பல்வேறு கட்சியினர் வழங்கிய 54 விடுதலை சந்தா (ரூ.66,100)




கும்பகோணம் கிருஷ்ணா மெடிக்கல் உரிமையாளர்  ரி.தமிழ்ச்செல்வன் ஒரு விடுதலை சந்தாவையும், திமுக பொறுப்பாளர் குணசீலன் ஒரு விடுதலை  சந்தாவையும், 45ஆவது வட்ட திமுக செயலாளர் சாக்கோட்டை  கண்ணன் ஒரு விடுதலை  சந்தாவையும், நகர தலைவர் கவுதமன் நகர மகளிர் அணி தலைவர்  வசந்தி கவுதமன்  ஆகியோர் 7 விடுதலை சந்தாவையும், வழக்குரைஞர் ரி. மொரார்ஜி ஒரு விடுதலை சந்தாவையும், மதிமுக வழக்குரைஞர் நி.மாணிக்கம் ஒரு விடுதலை  சந்தாவையும், தையல்நாயகி பிச்சைமுத்து வேப்பத்தூர் நூலகத்திற்காக ஒரு விடுதலை சந்தாவையும், குடந்தை நகர இளைஞரணி செயலாளர் எஸ்.விஜயேந்திரன் ஒரு விடுதலை சந்தாவையும், குடந்தை ஒன்றிய செயலாளர் கோவி.மகாலிங்கம்  3 விடுதலை சந்தாவையும், கும்பகோண கழக மாவட்ட வழக்குரைஞர் திருநாகேஸ்வரம் சக்திவேல் ஒரு விடுதலை சந்தாவையும், திருநாகேஸ்வரம் பாமக நகர செயலாளர் தமிழ்மணி இரு விடுதலை சந்தாவையும், திருநாகேஸ்வரம் தீபா மாதவன் ஒரு விடுதலை சந்தாவையும்,  விசிக குடந்தை நகர செயலாளர் கே.கலையரசன் ஒரு விடுதலை சந்தாவையும்   திருநாகேஸ்வரம் மாதவன், கும்பகோணம் கழக மாவட்டம் முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் த.சுந்தரமூர்த்தி  உண்மை சந்தாவையும், திருநாகேஸ்வரம் காளிதாஸ் ஒரு விடுதலை சந்தாவையும், குடந்தை. மில்லர்   ஒரு   விடுதலை சந்தாவையும், (திமுக)  செல்வம் ஒரு விடுதலை சந்தாவையும், (அதிமுக)  சந்திரசேகரன் ஒரு விடுதலை சந்தாவையும், நாமக்கல் எவரெஸ்ட் டிரான்ஸ்போர்ட் வேலுச்சாமி ஒரு விடுதலை  சந்தாவையும், கழக பொது செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன்: மாவட்ட தலைவர் கு.நிம்மதி, பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயகுமார், குடந்தை மாவட்ட செயலாளர்  உள்ளிக்கடை துரைராசு, கிளைக் கழக தலைவர் காமராஜ், திருவிடைமருதூர் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் எம்.என்.கணேசன், ஒன்றிய செயலாளர் நா.முருகானந்தம், ஒன்றிய செயலாளர் சங்கர், பெரியார் பெருந்தொண்டர்  ஜோதி, சிவக்குமார், திலீபன், பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.அரவிந்த், விசிக  இளைஞரணி மாநில செயலாளர் குடந்தை. தமிழினி, கலைச்செல்வம், தொழிலாளர் விடுதலை முன்னணி திருவுடைமருதூர் ஒன்றிய அமைப்பாளர் ஆர்.கண்ணன். (24.11.2020)



நாச்சியார்கோவில் கழக நகர தலைவர் சி.முத்துக்குமாரசாமி ஒரு விடுதலை சந்தாவையும், நாச்சியார்கோவில் நகர  இளைஞரணி செயலாளர் பா.கவுதமன் ஒரு விடுதலை சந்தாவையும்,  நாச்சியார்கோவில் நகர கழகத் துணை தலைவர் வீ.மணிவண்ணன் ஒரு விடுதலை சந்தாவையும், திருநிறையூர் சா.வெங்கடேசன்  ஒரு விடுதலை சந்தாவையும், குடந்தை நகர செயலாளர் வழக்குரைஞர் பி.ரமேஷ்  10  விடுதலை சந்தாவையும், நாச்சியார்கோவில்.சோலை.மாரியப்பன் ஒரு விடுதலை சந்தாவையும், நாச்சியார்கோவில் நகர  செயலாளர் வீ.பிரபாகரன்  ஒரு விடுதலை சந்தாவையும், பி.பார்த்திபன் ஒரு விடுதலை சந்தாவையும் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். 



'கும்பகோணம் கழக மாவட்டம்'  பாபநாசம் சா.பாலகிருஷ்ணன் ஒரு விடுதலை சந்தா,  செ.வினோத்குமார் ஒரு விடுதலை சந்தாவையும், சி.ராமச்சந்திரனின்  வாழ்விணையர் ஒரு விடுதலை சந்தாவையும், சாமி.வையாபுரி ஒரு விடுதலை  சந்தாவையும், பசுபதிகோவில்  அ.பழனிச்சாமி வழங்கிய சந்தாவை மாவட்ட  செயலாளர் உள்ளிக்கடை சு.துரைராஜ் ஒரு விடுதலை சந்தாவையும், கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன்: மாவட்ட பக துணை தலைவர் திருஞானசம்மந்தம், படப்பை. சு.அரவிந்த்.


 


இரண்டாவது கட்டமாக 54 விடுதலை சந்தா சேகரித்து ரூ.66,100 வழங்கினர்


குடந்தை கழக மாவட்டத்தில் 15.11.2020  கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் முதற்கட்டமாக 77 விடுதலை சந்தாவை சேர்த்து குடந்தை மாவட்ட பொறுப் பாளர்கள் ரூ.1,13,180 மாவட்ட பொறுப்பாளர்கள் வழங்கி மகிழந்தனர்


தமிழர் தலைவர் பாராட்டு


தமிழர் தலைவர் ஆசிரியர்   அவர்கள் கும்பகோணம் மாவட்ட தோழர்களின் செயல்பாடுகளை பாராட்டியும் பட்டுக்கோட்டை மாவட்ட தோழர்கள் 112 சந்தாக்களை கொடுத்துள்ளார்கள் ஆரோக்கியமான போட்டி வரவேற்க்கதகுந்ததே தோழர்களை பாராட்டவார்த்தைகளே இல்லை என 18-11-2020 அன்று விடுதலையில்  பாராட்டுஅறிக்கை எழுதியிருந்தார்கள்


 குடந்தை மாவட்டத்தில் இரண்டாவது கட்ட விடுதலை சந்தா வசூல்  24-11-2020 அன்று காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, மாவட்டச் செயலாளர் உள்ளிக்கடை துரைராசு, பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயக்குமார், குடந்தை நகரத் தலைவர் கு.கவுதமன், திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவார் எம். என் கணேசன், ஒன்றிய செயலாளர்கள் முருகானந்தம், சங்கர், திருநாகேஸ்வரம் சிவக்குமார், திலீபன், குடத்தை நகர செயலாளர் ரமேஷ், நாச்சியார்கோவில் நகரத்தலைவர் முத்துகுமாரசாமி, குடந்தை ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் படப்பை அரவிந்த் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.


காலை 10 மணிக்கு சாக்கோட்டையில் தொடங்கி கும்ப கோணம்,  கல்யாணபுரம், திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், திருநிறையூர், நாச்சியார்கோவில், திருப்பதந்துரை, மருத நல்லூர்,பாபநாசம், பசுபதிகோவில் ஆகிய ஊர்களுக்குச் சென்று இரவு 8.00மணிக்கு


அய்யம்பேட்டையில் சந்தா திரட்டும் பணி முடிவடைந்தது. 10 மணி நேரத்தில் 54விடுதலை சந்தா, 3 உண்மை சந்தா, பெரியார் பிஞ்சு சந்தா,  சேகரித்து ரூ.66,100 வழங்கினர். அனைத்து பகுதிகளிலும் மாவட்ட ஒன்றிய நகர, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் அன்புடன் வரவேற்று சந்தாக்களை வழங்கினர். சந்தித்த அனைத்து கட்சி நண்பர்களும் சந்தாக்களை வழங்கினர்.


 


திருவிடைமருதூர் தோழர்களின் சிறப்பான செயல்பாடு


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின்


88-ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக அவர் பெரிதும் விரும்பும் விடுலை சந்தாக்களை  நாடு முழுவது சேர்த்து கழகத்தோழர்கள் வழங்கி வருகின்றனர்


குடந்தை கழகமாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் பொதுக் குழு உறுப்பினர் சு.விஜயக்குமார்  தலைமையில் மாவட்டத்தலைவர் குநிம்மதி, ஒன்றியத் தலைவர் எம்.என்.கணேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் முருகானந்தம், தெற்கு ஒன்றிய செயலாளர் சங்கர், திருநாகேஸ்வரம் சிவக்குமார், திலீபன், வழக்குரைஞர் சக்திவேல், நாச்சியார்கோவில் நகரத் தலைவர் முத்துகுமாரசாமி, செயலாளர் வீ.பிரபாகரன், கவுதமன் உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள் இணைந்து  திருவிடைமருதூர், திருநாகேஸ் வரம், கல்யாணபுரம், நாச்சியார் கோவில் பகுதிகளில் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து திருவிடைமருதூர் ஒன் றியத்தின் சார்பில் இதுவரை 41 விடுதலை சந்தாக்களை திரட்டி வழங்கியுள்ளனர் மேலும் சந்தா திரட்டும் பணி தொடர்ந்த நடைபெறும் என பொறுப்பாளாகள் தெரிவித்தனர் தோழர்கள் இணைத்து செயல்பட்டால் எந்தப் பணியும் சிறப்பாக அமையும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திருவிடைமருதூர் ஒன்றிய தோழர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ள தோழர்களுக்கு பாராட்டுக்கள்.


 


பட்டுக்கோட்டை மாவட்டத்தை முந்தியது குடந்தை


112 சந்தாக்களை அளித்து முன்னிலையில் இருந்த பட்டுக் கோட்டை மாவட்டத்தை பின்னுக்குத் தள்ளி  இது வரை மொத்த 131 சந்தாக்களுக்கான தொகை 1,79,280 அளித்து குடந்தை மாவட்டம் முன்னிலை பெற்றது.


நிவர் புயல் அச்சுறுத்தலிலும், மழையிலும் குடந்தை மாவட் டத்தில் இடைவிடாத விடுதலை சந்தா வசூல் பணி நடைபெற்றது.


No comments:

Post a Comment