மருத்துவ மேற்படிப்புகளுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு: உயர்நீதிமன்ற உத்தரவு - தமிழக அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்


புதுடில்லி,நவ.18 சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப் ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு  இட ஒதுக்கீடு வழங்கப்படும்  என்ற மாநில அரசாணை மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக  தமிழக அரசு பதிலளிக்க தாக்கீது அனுப்பியுள்ளது.


நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசா லிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவப் மேற் படிப்புகளில் 50 சதவிகித இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்க  உத்தரவிடக் கோரி, அரசு மருத்துவர்கள் எம்.செய்யது பக்ரூதீன், ஜி.குமரவேல் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


இதையடுத்து, வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்முன் விசாரணைக்கு வந்த போது,  அரசு மருத்துவர்களுக்கு மருத் துவ முதுநிலை மற்றும்  டிப்ளமோ சிறப்பு படிப்புகளில் உரிய இடஒதுக்கீடு அளிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் சமீபத்தில்  உத்தரவிட்டுள்ளதால், இந்தப் படிப்புகளுக்கு அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில்  வாதிடப்பட்டது.


மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம்


இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வேறொரு வழக்கு நிலுவையில் உள்ளதால், அதுவரை எந்த  உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஆஜ ரான அரசின் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், ''மேற்கண்ட விவகாரத்தில் இடஒதுக்கீடு வழங்க  முடிவு செய்யப்பட்டு  அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்து, அதன் நகலை நீதிபதி முன் னிலையில் தாக்கல் செய்தார். இதையடுத்து,  மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசின்  நிலைப் பாட்டை பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்து கடந்த  9ஆம் தேதி உத்தரவிட்டது.


இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மருத்துவர் அமித் மொகந்தி என் பவர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில்  மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட் டுள்ளது.


அதில், ‘‘சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50 விழுக்காடு இடங்களை அரசு மருத் துவர்களுக்கு ஒதுக்க ஆட்சேபனை இல்லை என்ற உயர்நீதிமன்ற இடைக்கால உத்தரவிற்குத் தடை விதிக்க வேண்டும். அதேபோன்று இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில்  வெளியிடப்பட்டுள்ள அரசாணையையும் ரத்து செய்ய வேண்டும்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.


நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் நேற்று (17.11.2020) இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ‘இந்த விவ காரத்தில் இடைக்காலத் தடை எதுவும்  தற்போது பிறப்பிக்கத் இயலாது. இந்த மனுவுக்கு தமிழக அரசும், இதர எதிர் மனுதாரர்களும் பதிலளிக்க தாக்கீது அனுப்ப உத்தரவிடப்படுகிறது,’ என  கூறி, வழக்கை 19 ஆம் தேதி ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Comments