கரோனாவால் பாதிக்கப்பட்டோர் 5.78 கோடியாக உயர்வு உயிரிழப்பு 13.76 லட்சத்தை தாண்டியது

                             ஜெனீவா, நவ. 21-- பன்னாட்ட ளவில் கரோனாவால் பாதிக் கப்பட்டோர் எண்ணிக்கை 5.78 கோடியாக உயர்ந்துள் ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டா லும் இதன் வீரியம் குறைந்த பாடில்லை.


இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நில வரப்படி 5 கோடியை 78 லட்சத்து 95 ஆயிரத்து 314 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


                                             கரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 40,097,772 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 76 ஆயிரத்து 806 பேர் உயிரிழந் துள்ளனர். வைரஸ் பரவியவர் களில் 1 கோடியை 64 லட்சத்து 20 ஆயிரத்து 736 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1, லட்சத்து 02 ஆயிரத்து 205 பேர் நிலைமை கவலைக்கிட மாக உள்ளது.


Comments