ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:  • உ.பி., அரியானா மாநிலத்தையடுத்து, தற்போது பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்தில் மதம் மாறி திருமணம் செய்வதை தடுக்கும் சட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள் ளது. ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கப்படும் இந்த திருமணத்தை செய்திடுவோர்க்கு அய்ந்தாண்டு வரை சிறை தண்டனை உண்டு என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • பீகாரில் நிதிஷ்குமார் நான்காவது முறையாக முதல்வராக பதவி ஏற்றுள்ளார். முன்னர் துணை முதல்வராக இருந்த பாஜகவின் சுசில் குமார் மோடிக்கு பதிலாக பிரபலம் இல்லாத பாஜகவின் இருவர் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் டில்லியும், நாக்பூரில் இருந்து ஆர்.எஸ்.எஸூம் வழி நடத்தும் என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

  • கடும் நிதி நெருக்கடிக்கு ஆளான லட்சுமி விலாஸ் வங் கியில் தற்காலிக செயல் நிறுத்தத்தை ரிசர்வ் வங்கி செயல் படுத்தியுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் ரூ.25000-க்கு மேல் பணம் எடுக்க முடியாது. வங்கியை, டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கான வரைவுத் திட்டத்தை செயல்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:  • அரசமைப்புச் சட்டப் பிரிவு 32-ஏ-ன்படி, தனிமனித உரிமை பாதிக்கப்பட்ட எவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு அளிப்பதை உச்ச நீதிமன்றம் ஊக்கப்படுத்த விரும்பவில்லை என தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, கேரளாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் காப்பன் பிணை வழக்கின் போது தெரிவித்துள்ளார். அண்மையில் இதே உச்ச நீதிமன்றம் அர்னாப் கோஸ்வாமிக்கு 32-ஏ பிரிவின்கீழ் மனுவை அனுமதித்து, பிணை வழங்கியது. பொதுவாக அவசர நிலையில்தான் இந்த பிரிவை தடை செய்வார்கள். ஆனால் அவ்வாறு அறிவிக்காம லேயே எங்களால், அந்த பிரிவை தடை செய்ய முடியும் என்பது போல் நீதிபதியின் கருத்து உள்ளது என ஆசிரியர் பிரதாப் பானு மேத்தா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:  • அண்மையில் புது டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்ததையடுத்து, அப்பல்கலைக்கழகத்திற்கு சுவாமி விவேகானந்தா பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என பாஜக பொதுச் செயலாளர் சி.டி.ரவி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


தி டெலிகிராப்:  • பீகார் சட்டசபைத் தேர்தல் நேரத்தில் வைசாலி மாவட்டத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மருத்துவமனையில் போராடிய செய்தியை, ஆளும் கட்சியான நிதிஷ்குமார் கூட்டணி, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மூடி மறைத்ததை தனது டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி ஆகியோர் பதிவிட்டதையடுத்து, தற்போது காவல்துறை ஒருவரை கைது செய்துள்ளது. இது தொடர்பாக மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாக இடது சாரி கட்சிகள் அறிவித்துள்ளன.

  • இந்திய பத்திரிக்கையாளர் சங்கம் பிரபலங்கள் பாதிக்கப் பட்டால்தான் கூக்குரல் எழுப்புகிறது. தன்னைப் போன்ற சாதா ரண பத்திரிக்கையாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வில்லை என குற்றம் சாட்டி, ஷில்லாங் டைம்ஸ் பத்திரிக்கை ஆசிரியர் முகிம், சங்கத்தில் இருந்து விலகுவதாக கடிதம் அனுப்பியுள்ளார்.


பி.பி.சி. நியூஸ் தமிழ்:


தப்லீக் ஜமாத் இஸ்லாமிய அமைப்புக்கு எதிரான செய்தி களை வெளியிட்ட ஊடக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரித் தொடரப்பட்ட வழக்கில் இந்திய அரசு அளித்துள்ள பதில் தங்களுக்கு திருப்தியாக இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள குறைகளை நிவர்த்தி செய்து புதிய பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்யவும் இந்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


குடந்தை கருணா


18.11.2020


Comments