மத்திய பிரதேசத்தில் ஊரடங்கு அமல்

போபால், நவ. 22- மத்தியப் பிரதேசத்தில் கடந்த சில நாட் களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அங்கு 1.89 லட்சம் பேர் பாதிக்கப் பட்டு 3,138 பேர் உயிரிழந்தி ருக்கும் நிலையில், சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண் ணிக்கை இந்த மாதத்தில் முதல் முறையாக 10 ஆயி ரத்தை கடந்துள்ளது.


இவ்வாறு தொற்று அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக,  இந்தூர், போபால், குவாலியர், ரட் லாம் மற்றும் விதிஷா ஆகிய 5 நகரங்களில் நேற்று (சனிக் கிழமை) முதல் இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரை ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. எனினும் மாநிலத்தில் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்தும் திட்டம் இல்லை என அம் மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் கூறியுள்ளார்.


இதற்கிடையே தொற்று அதிகரித்து வரும் குஜராத்தின் ஆமதாபாத் நகரில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அங்கு சூரத், வதோதரா, ராஜ்கோட் ஆகிய 3 நகரங்களிலும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கை அமல் படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.


Comments