திருச்சி கழக மாவட்டத்தில்  47 விடுதலை சந்தா  (ரூ.64,800)  கழகப் பொதுச்செயலாளர் இரா. ஜெயக்குமாரிடம் வழங்கினர்

திருச்சி மாவட்டத்தில் 21-.11.2020 அன்று கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில்  மாவட்டத் தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர்,மாவட்டச் செயலாளர்  மோகன்,   மாநில இளைஞரணி செயலாளர்த.சீ.இளந்திரையன், மண்டலசெயலாளார் ப.ஆல்பர்ட, பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் அரவிந்தன் மாவட்ட ப.க.தலைவர் ப.லெ.மதிவானன், திருவெறும்பூர் ஒன்றியத் தலைவர் தமிழ்ச்சுடர் மாவட்ட ப.க.செயலாளர் மலர்வண்ணன், மாநகர ப.க. தலைவர் குப்திதீன், மாநகரத் தலைவர் துரைசாமி, திருவரங்கம் நகரத் தலைவர் கண்ணன், திருவெறும்பூர் நகர செயலாளர் சிவானந்தம் காட்டூர் நகரத் தலைவர் அ. காமராஜ். நகர துணை தலைவர் சங்கிலிமுத்து திருச்சி மாநகர அமைப்பாளர் கனகராஜ், எழுத்தாளர் வி.சி.வில்வம் உள்ளிட்டோர் விடுதலை சந்தா சேர்ப்பு பணியில் ஈடுபட்டனர்.காலை 9.30 மணிக்கு திருவெறும்பூரில் தொடங்கி, காட்டூர், கைலாஸ்நகர், எரும்பீஸ்வரர் நகர் திருச்சி ஆகிய ஊர்களுக்குச் சென்று முற்பகல் 12.30 மணிக்கு திருவரங்கத்தில் சந்தா திரட்டும் பணி (திருச்சி) மாவட்டத்தில் முடிவடைந்தது. 3,மணி நேரத்தில் 47 சந்தாக்கள் சேகரித்து ரூ.64,800 வழங்கினர். அனைத்து பகுதிகளிலும் மாவட்ட ஒன்றிய நகர, கிளைக்கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் அன்புடன் வரேவேற்று சந்தாக்களை வழங்கினர். அனைத்து கட்சி நண்பர்களும் இன்முகத்துடன் சந்தாக்களை வழங்கினர்


 


Comments