4 கோடி தடுப்பூசி தயார் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

புதுடில்லி, நவ.16, கரோனா தொற்று தடுப்புக்கான கோவிஷீல்டு தடுப்பூசி 4 கோடி டோஸ்களை இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து முடித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.


தற்போது சீரம் நிறுவனமும்  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இந்தியாவில் 15 இடங் களில் கோவிஷீல்டு தடுப்பூசியின் 2ஆவது மற்றும் 3ஆவது கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்து கின்றன.  1,600பேருக்கு இந்த மருத் துவ பரிசோதனையை நடத்துவ தற்கான பதிவு முடிந்து விட் டது. இந்த தடுப்பூசி குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுகையில், மருத்துவ பரிசோ தனையின் நம்பிக்கைக்குரிய முடி வுகள், கோவிஷீல்டு தடுப்பூசி, கரோனா வைரஸ் தொற்று நோய்க்கு யதார்த்தமான ஒரு தீர்வாக இருக்கக்கூடும் என்ற நம் பிக்கையை அளிக்கிறது. இந்த தடுப் பூசி இந்தியாவில் மனித பரிசோ தனையில் மிகவும் மேம்பட்ட தடுப்பூசி ஆகும்.


2ஆவது மற்றும் 3ஆவது கட்ட மருத்துவப் பரிசோதனை முடிவு களின் அடிப்படையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உதவியுடன் சீரம் நிறுவனம், இந்த தடுப்பூசியை விரைவில் இந்தியாவில் கிடைக்கச்செய்யும். ஏற்கெனவே இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அபாயகரமான உற் பத்தி மற்றும் கையிருப்பு உரிமத் தின்கீழ் 4 கோடி டோஸ் தடுப் பூசியை சீரம் நிறுவனம் ஏற்கெனவே தயாரித்து முடித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.


சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி பூனவாலா கூறுகையில், கரோனாவைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட் டத்தை வலுப்படுத்துவதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முக்கிய பங்காற்றியுள்ளது. நோய்எதிர்ப்பு மற்றும் செயல்திறன் மிக்க தடுப்பூசியை உருவாக்குவதில் இந்தியாவை முன்னணியில் வைப் பதற்கு இந்த ஒத்துழைப்பு மேலும் உதவும் என்று குறிப்பிட்டார்.


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்தலைவர் மருத்துவர் பல ராம் பார்கவா கூறுகையில், கரோனா வைரஸ் தடுப்பூசி உரு வாக்கத்திலும், உலகளாவிய தயா ரிப்பிலும் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சீரம் நிறுவனம் தனது ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி வலிமையை தொடர்ந்து நிரூபித்து வருகிறது. உலகளாவிய பெருந் தொற்று நோய்க்கு எதிரான எங்கள் போராட்டத்தை மேம்படுத்து வதற்கு எங்கள் நிபுணத்துவம் மற்றும் ஆதரவை வழங்குவதற்கான எங்கள் பங்களிப்பு, இந்த கூட் டாண்மை ஆகும் என்று தெரிவித்தார்.


Comments