சென்னையில் பலத்த மழை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு தொடரும்


சென்னை, நவ. 12- சென்னை யில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருவ தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


சென்னையில் வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், மயிலாப்பூர், சாந்தோம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்வதால் குளுமையான சூழல் நிலவி வருகிறது. மழை பல இடங்களில் வாகனங் களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். தாழ் வான பகுதிகளில் இருந்த வீடு களிலும் தண்ணீர் புகுந்தது. காலையில் அலுவலகங்க ளுக்கு செல்பவர்களும் இத னால் கடும் சிரமத்தை சந் தித்து வருகின்றனர். அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள் ளுவர், சென்னை, காஞ்சிபு ரம், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.


இதனிடையே தமிழகத் தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ள தாக இந்திய வானிலை மய் யம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத் தில் மழைக்கு வாய்ப்பு உள் ளது. புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.


Comments