ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், சென்னை:  • அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது பணி நியமனம், முறைகேடுகள் குறித்து ஏராளமான குற்றச்சாட்டுகள் வந்துள்ள நிலையில் அதனை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழுவினை தமிழக அரசு நியமித்துள்ளது.

  • அயோத்தி நகரை வேதகால அயோத்தியாக மாற்றுவதுதான் பிரதமர் மோடியின் கனவு என உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:  • மத்திய பிரதேசம் இந்தூர் அருகே அரசு நிலத்தை கையகப்படுத்த முயன்றதைத் தடுத்து, அதிகாரியைத் தாக்கிய குற்றத்தில் கம்ப்யூட்டர் பாபா சாமியார் கைது செய்யப்பட்டார்.


தி டெலிகிராப்  • ரிபப்ளிக் டிவி இயக்குனர் அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமின் கொடுத்ததற்காக உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட்  பற்றி டிவிட்டரில் கேலி செய்து பதிவிட்ட ஹிந்தி காமெடி நடிகர் குனார் கம்ரா மீது நீதிமன்ற அவதூறு நடவடிக்கை எடுக்க மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், தான் தனது கருத்தைத் திரும்பப்  பெறப் போவது இல்லை. மன்னிப்பும் கேட்க முடியாது. இதை விட முக்கியமான, பண மதிப்பிழப்பு, காஷ்மீரில் 370 சரத்து ரத்து, தேர்தல் நிதி பத்திரங்கள் குறித்த வழக்குகள் மீது அக்கறைக் காட்டுங்கள் என குனால் கம்ரா கூறியுள்ளார்.

  • ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு அப்பல்கலைக்கழக துணை வேந்தர் குறித்த புகாரினை பல்கலைக்கழக மாணவர் அமைப்பு அனுப்பியது.


டைம்ஸ் ஆப் இந்தியா:  • பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர் களில் நான்கில் ஒருவர் உயர்ஜாதியைச் சேர்ந்தவர். 2015 தேர்தலில் உயர்ஜாதியில் இருந்து 53 பேர் வெற்றி பெற்ற நிலையில், 243 பேர் கொண்ட சட்டசபையில் தற்போது 64 பேர் உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள்.

  • மத்திய அரசு நடத்தும் கேந்திரியா வித்யாலாயா பள்ளிகளில் தமிழைப் புறக்கணித்து, இந்தி, சமஸ்கிருதத்தை மத்திய அரசு ஊக்குவிக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.


- குடந்தை கருணா


14.11.2020


Comments