செய்தியும், சிந்தனையும்....!

‘நீட்' ஒழிக்கப்பட்டு இருந்தால்...


அரசு பள்ளியில் படித்த - வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மகனுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.


மகிழ்ச்சிதான் - 'நீட்' ஒழிந்து தமிழ்நாட்டில் உள்ள 69 விழுக்காடு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்று இருந்தால் நகர சுத்தித் தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகளுக்குக் கூட இடம் கிடைத்திருக்கும் - இதைவிட இரட்டிப்பு மகிழ்ச்சியில் குதித்தாடி இருப்போமே!.


எந்த இலட்சணத்தில்...?


வேல் யாத்திரையைப் பார்த்து தமிழக அரசு அஞ்சுகிறது: - பா.ஜ.க. கருத்து.


அ.தி.மு.க. - பா.ஜ.க. தேர்தல் கூட்டணி இந்த இலட்சணத்தில் தான் அமையப் போகிறதா?


தேவை நடவடிக்கை


இளங்கலை பட்டப் படிப்பில் - அனைவரும் வெற்றி என்ற முறையில் (ஆல் பாஸ்) தேர்வானவர்களை முதுகலையில் சேர இராசிபுரம் அரசு கல்லூரியில் அனுமதி மறுப்பு.


அரசு ஒரு முடிவு செய்தால், அதனை அரசு கல்லூரி ஏற்க வேண்டாமா?


அதிசயம், ஆனால் உண்மை!


பழநி மருத்துவமனையில் ரத்தம் தேவைப்படும் நோயாளிக்கு, தானே முன்வந்து குருதிக் கொடை அளித்த மருத்துவர் உதயகுமார்.


இத்தகைய முன்மாதிரியான மருத்துவர்களைக் காண்பது அரிதினும் அரிது. அவரை அரசு கவுரவிக்கவேண்டும்.


கொள்ளையோ கொள்ளை!


அண்ணா பல்கலைக் கழகத்தில் 41 'புரொஜக்டர்கள்' கொள்ளை!


இன்னும் என்னென்ன கொள்ளைகள் என்பதற்காகத்தானே நீதிபதி தலைமையில் விசாரணை!


Comments