நிவர் புயல்: மக்களை பாதுகாக்க 36 அய்ஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னை, நவ. 25- நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை கண்காணித்து உடனுக்குடன் மீட்பு பணிகளை கவனிக்கும் வகையில் 36 அய்ஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களுக்கும் புயல் நிலவரத்தை கண்காணிக்க அய்ஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


நிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 8 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழக அரசு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


Comments