மருத்துவ கலந்தாய்வில் மேலும் 34 மாணவர்கள் போலி சான்றிதழ் முறைகேடு அம்பலம்

தமிழக தரவரிசைப்பட்டியலில்  வெளிமாநிலத்தவர்களுக்கு வாய்ப்பா? தமிழக மாணவர்கள் அதிர்ச்சி!


சென்னை, நவ. 19- தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக் கான கலந்தாய்வில் வெளிமாநி லத்தை சேர்ந்த மேலும் 34 மாண வர்கள் போலி இருப்பிட சான்றி தழ்கள்மூலம் முறைகேடாக தமி ழக அரசு வெளியிட்டுள்ள தர வரி சைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அம்பலமாகியுள்ளது.


2020--21ஆம் கல்வி ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் மாண வர்களை  சேர்ப்பதற்கான நீட் தேர்வில் பங்கேற்க, தமிழகத்தில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 617 மாணவ, மாணவியர் நீட் தேர்வு எழுத பதிவு செய்து, 99 ஆயிரத்து 610 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப் பட்டது. அதில் 57 ஆயிரத்து 215 பேர் தேர்ச்சி பெற்றனர்.


அரசு வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் தமிழகத்துக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குரிய பட்டியலில் கேரளா, தெலங்கானா மாநில தரவரிசைப்பட்டியலில் இடம் பிடித்துள்ள சில மாணவர்க ளின் (7 பேர்) பதிவு எண்களும் இடம்பெற்று இருந்தன. இதனால் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க இருந்த மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர்.


அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு  7.5விழுக்காடு இடங்களுக்கான கலந்தாய்வை  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று (19.11.2020) தொடங்கி வைத்தபோது, தரவரி சைப் பட்டியல் முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதுகுறித்து அமைச்சர் பேசும் போது, மருத்துவக் கலந்தாய்வு வெளிப்படைத்தன்மையுடன் நடக்கிறது. குளறுபடிகள் ஏதும் இல்லை. அப்படி இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


ஆனால், தெலங்கானா மாநிலத் தின் மருத்துவ தரவரிசைப் பட்டி யலை நேற்று மீண்டும் தீவிரமாக அலசி ஆய்வு செய்ததில் அந்த பட்டியலில் இடம் பெற்று இருந்த மேலும் 34 மாணவ, மாணவியரின் நீட் தேர்வு பதிவு எண்கள் தமிழக தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் தெலங்கா னாவில் உள்ளூர் முகவரியை கொடுத்துள்ளனர்.  தமிழக தரவரி சைப் பட்டியலில் தமிழக முகவ ரியை கொடுத்துள்ளதாகவும் தெரி கிறது. பெரும்பாலான மாணவர் கள் இருப்பிடச் சான்றிதழ்களை முறைகேடாக பெற்றுள்ளதாக வலுவான சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சந்தேகத்துக்கு தீர்வு காண வேண்டியது தமிழக அரசின் மருத் துவக் கல்வி அதிகாரிகள்தான்.


நீட் தேர்வால் கலந்தாய்வில் 14,111 பழைய மாணவர்கள், 9,000 புதிய மாணவர்கள் பங்கேற்பு


நேற்று தொடங்கிய 7.5 சதவீத இடங்களுக்கான கவுன்சலிங்கில் பங்கேற்ற மாணவ, மாணவியரில் பெரும்பாலானவர்கள் மேற்கண்ட 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் முழுப்பயனை அனுபவிக்க முடியா மல் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்தனர். குறிப்பாக, இந்த ஆண்டுக்கான மருத்துவக் கவுன்ச லிங்கில் 14,111 மாணவ, மாணவியர் பழைய மாணவர்கள்.


இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த வர்கள் என்று பார்த்தால் வெறும் 9 ஆயிரம் பேர்தான். அதனால் இந்த கவுன்சலிங்கில் பழைய மாண வர்களே இரண்டு ஆண்டுக்கும் மேலாக நீட் பயிற்சி பெற்று அதிக மதிப்பெண்கள் எடுத்து இட ஒதுக்கீட்டை பெற்றுள்ளனர். 


நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறுகிய கால அவகாசம் கொடுக் கப்பட்டது. போதிய அவகாசம் கொடுத்திருந்தால், போதிய சான்றி தழ்களுடன் அதிக மாணவர்கள் விண்ணப்பித்து இருக்க முடியும். இது தான் குளறுபடிக்கு காரணம் என்று மாணவர்கள் குற்றம் சாட்டு கின்றனர்.


Comments