வறுமை தாண்டவமாடுகிறது!

கருநாடகத்தில் அனுமனுக்கு ரூ.1200 கோடியில் சிலையாம்


பெங்களூரு, நவ.18 கருநாடக மாநிலத்தில் உள்ளராம்பூர் பகுதியில், ஆயிரத்து 200 கோடி ரூபாயில் அனுமனுக்கு சிலை அமைக்கப்படும் என்று ஹனுமான் ஜென்மபூமி அறக் கட்டளைத் தலைவர் ஆனந்த் சரஸ்வதி அறிவித்துள்ளார்.


கருநாடக மாநிலம் ராம்பூர் பகுதியில், ராமரின் பக்தன் என்று கூறப்படும் அனுமனுக்கு, 215 மீட்டர் உயரத்தில் சிலை நிறுவ உள்ளதாக, அனுமன் ஜென்மபூமி அறக்கட்டளைத் தலைவர் சாமியார் ஆனந்த் சரஸ்வதி அறிவித்துள்ளார். 1200 கோடி ரூபாய் செலவில் இந்தசிலை அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Comments