தந்தை பெரியாரின் தத்துவக் கொள்கலனாக, சமூக நீதித் தடத்தில் விபத்தில்லாமல் பயணித்து, சமூகநீதி சாகாமலிருக்க இங்கும், எங்கும் களம் கண்டு வழிநடத்தும் வீரராம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 88 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவானா டிச-2 சுயமரியாதை நாளை கொண்டாடிடும் வகையில், அவர்பெரிதும் விரும் பிடும் விடுதலை நாளேட்டுக்கு கழகத் தோழர்கள் நாடெங் கும் தேனீக்களாகச் சுழன்று சந்தா திரட்டி வருகின்றனர்.
இதன் பொருட்டு கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் ஆகியோர் அக்டோபர் 30, 31ஆம் நாள் தாராபுரம், திருப்பூர், கோபிச்செட்டிப் பாளை யம் மற்றும் மேட்டுப்பாளையம் மாவட்டங்களுக்கு பய ணித்தனர்.
அக்டோபர் 30 ஆம் தேதி காலை தாராபுரம் பெரியார் திடலில் தாராபுரம் மாவட்டச் செயலாளர் க.சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் நா.சக்திவேல் மற்றும் தோழர்கள் குழுமியிருந்தனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 88 ஆம் பிறந்த நாள் நிகழ்வுகள் குறித்தும், விடுதலை சந்தாக்கள் திரட்டுவது குறித்தும் விளக் கிப்பேசினார். இதனையடுத்து, பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல், தாராபுரம் நகர அமைப்பாளர் சின்னப்பதாஸ், தாராபுரம் நகர திமுக இலக்கிய அணி அமைப்பாளர் முனை வர் கே. வி.சிவசங்கர், கழக ஒன்றியத் தலைவர் நாத்திக சிதம்பரம் மற்றும் தோழர்கள் 6 சந்தாக்களை வழங்கினர்.
கழகப் பொதுச்செயலாளரிடம் விடுதலை சந்தா வழங்கல்
இதனையடுத்து, உடுமலைப்பேட்டை நகர திமுக செயலாளர் மத்தீன் அவர்கள் அலுவலகத்துச் சென்று, கரோனாவிலிருந்து மீண்டு வந்த அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது. திமுக நகர செயலர் மத்தீன் 10 விடுதலை ஆண்டு சத்தாக்கள் வழங்குவதாக உறுதியளித்தார்.
பிறகு, உடுமலைப்பேட்டையில் உள்ள திராவிடர் கழக மாநில வழக்குரைஞரணி துணைத் தலைவர் தம்பி பிரபாகரன் அலுவலகத்தில் நடைபெற்ற விடுதலை சந்தா சேர்ப்பு விளைச்சல் கூட்டத்தில் வழக்குரைஞர் ஜெ. தம்பிபிரபாகரன், தி.வெங்கடாசலம் ஆகியோர் விடுதலை ஆண்டு சந்தாக்களை வழங்கி மகிழ்ந்தனர். உடுமலைப் பேட்டையில் உணவு இடைவேளைக்குப்பின், காரத் தொழுவு கிராமத்தில் உள்ள அமைப்புச் செயலாளர் த.சண் முகத்தின் இளவல் அந்த ஊர் கிளைக் கழக அமைப்பாளர் த.நாகராசனிடமும், சண்முகத்தின் உறவினரும், திமுக மடத்துக்குளம் ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் ஜெயச்சித்ரா இராம்குமார் விடுதலை சந்தா வழங்கி மகிழ் வுடன் விடையனுப்பினர்.
திருப்பூர் - மடத்துக்குளம்
தி.மு.க திருப்பூர் தெற்கு மாவட்டம் புதிதாக உருவாக் கப்பட்டு அதன் மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் இரா.ஜெயராம கிருஷ்ணன் அவர்களின் இல்லத்துக்குக்குச் சென்று, திராவிடர் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் தாராபுரம் கழக மாவட்டத் தோழர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துதெரிவித்தனர். அப்போது திமுக மாவட்டச் செயலாளர் இரா.ஜெயராம கிருஷ்ணன் தாய்க் கழகத் தோழர்களை சந்திக்க வேண்டும் எனவும், திமுக பொறுப்பாளர்கள் அனைவரும் விடுதலை நாளிதழுக்கு சந்தா வழங்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி யளித்தார்.
கணியூர்
தாராபுரம் கழக மாவட்ட கலந்துறவாடல் கூட்டம் கணியூரில் உள்ள மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் தங்கவேல் இல்லத்தில் மாலை 6.30 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது, உரையாற்றும் போது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளன்று செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், பொது எதிரியை கண்டறிந்து, அவர்களின் சமூக விரோதப் போக்கை முறியடிக்க கூட்டுக் குழுவாக செயல் பட வேண்டும் என்றார். பின்னர், இளைஞரணி புதிய பொறுப்பாளர்களை அறிவித்து உரையாற்றினார். அப்போது 10 அரையாண்டு சந்தா, 7 ஆண்டு சந்தா, 2 உண்மை சந் தாக்களை முதல் கட்டமாக வழங்கினர். தாராபுரம் மாவட்டத் தலைவர் கணியூர் கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் க.சண்முகம், மாவட்ட அமைப்பாளர் கி.மயில்சாமி, மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் மா.சிவகுமார், மாவட்ட துணைச் செயலாளர் பழ. நாகராசன், மடத்துக்குளம் ஒன் றியச் செயலாளர் தங்கவேல், பகுத்தறிவாளர் கழகம் சஆறு முகம், நா.செல்வராஜ், மாவட்ட இளைஞரணித் தலைவர் வெ.மாயவன், மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் வெற்றி மணி, அர்ச்சுனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வீராச்சிமங்கலம்
அக்டோபர் 31 ஆம் தேதி காலை 9 மணிக்கு வீராச்சிமங் கலம் கிராமத்தில் உள்ள திராவிடர் கழக தாராபுரம் ஒன்றிய செயலாளர் ச. முருகன் இல்லத்துக்குச் சென்று, அண்மையில் பிறந்த பெயரக் குழந்தை இறந்தது குறித்து விசாரித்து குடும்பத்தாருக்கு கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார் அவர்கள் ஆறுதல் கூறினார். மீளாத்துயரிலும், மதவெறி - ஜாதி வெறிமாள போரிடும் விடுதலை, உண்மை 1 ஆண்டு சந்தா வழங்கினார். செயலாளர் க.சண்முகம், நகர தலைவர் மணி, நகர செயலாளர் சங்கர், வழக்குரைஞர் முரு கேசன், பகுத்தறிவாளர் கழகம் திராவிடன் உடனிருந்தனர்.
திருப்பூர் புத்தக நிலையத்தில் கழகத் தோழர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில்,மாவட்டச் செயலா ளர் யாழ்.ஆறுச்சாமி, மாவட்ட அமைப்பாளர் சிவசாமி, மாநகரத் தலைவர் பாலகிருஷ்ணன், மாநகரச் செயலாளர் பா.மா.கருணாகரன், துணைச் செயலாளர் தென்னூர் முத்து, அ.சுப்பிரமணியன், சிவகுமரன், இரா.தங்கவேல், நளினம் நாகராசு, வெள்ளக்கோயில் மணிகண்டன், புத்தக விற்ப னையாளர் மைனர் 10 விடுதலை சந்தா, 2 உண்மை சந்தா, 1 பெரியார் பிஞ்சு சந்தா வழங்கினர்.
கோபிச்செட்டிப்பாளையம்
திராவிடர் கழக கோபிச்செட்டிப்பாளையம் கழக மாவட்டச் செயலாளர் சிவலிங்கம் அவர்களின் வாழ் விணையர் தேவகி அண்மையில் மறைவுற்றார். இந்நிலை யில் அவரது இல்லத்திற்குச் சென்று தேவகி உருவப் படத் திற்கு கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் மாலை அணிவித்து, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். சிவலிங்கம் மகள்கள் மதிவதனி, அறிவுச்செல்வி , பொதுக் குழு உறுப்பினர் நம்பியூர் மு.சென்னியப்பன், ஆசிரியர் குப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
அங்கிருந்து, கோபி மாவட்டத் தலைவர் இரா.சீனு வாசன் இல்லத்துக்குச் பயணக் குழு சென்றடைந்தது. மாவட்டத் தலைவர் சீனுவாசன் 7 அரையாண்டு விடுதலை சந்தா, மாவட்டச் செயலாளர் ந.சிவலிங்கம் 3 அரையாண்டு சந்தா, மண்டலச் செயலாளர் பெ.இராஜமாணிக்கம் 1 ஆண்டு சந்தா, 4 அரையாண்டு சந்தா, 1 உண்மை சந்தா, 1 பெரியார் பிஞ்சு சந்தா உள்பட மொத்தம் 15 விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கினர்.
இளைஞரணி சந்திப்புக் கூட்டம்
பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் நம்பியூர் மு.சென்னியப்பன் இல்லத்தில் உணவு வழங்கி உபசரிக் கப்பட்டது. உணவு இடைவேளைக்குப் பின் இளைஞரணி தோழர்கள் கலந்துறவாடல் நடைபெற்றது. அப்போது இளைஞரணி பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
சுயமரியாதைச் சுடரொளி வெங்கிடு இல்லம்:
கோபிச்செட்டிப்பாளையம் திமுக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பெரியார் பெருந்தொண்டர் வெங் கிடு அண்மையில் மறைவுற்றார். இந்நிலையில், அவரது இல்லத்திற்குச் சென்ற திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் சுயமரியாதைச் சுடரொளி வெங்கிடு அவர்களின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, அவ ரின் வாழ்விணையர் திரிபுராம்பாள், மகன்கள் குமணன், மணிமாறன், செங்குட்டுவன் மகள் செம்பியன்மாதேவி ஆகியோரிடம் ஆறுதல் கூறினார். அப்போது, மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், மாநில இளை ஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், கோபி மாவட்டச் செயலாளர் ந.சிவலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் வழக் குரைஞர் மு.சென்னியப்பன், ஆசிரியர் குப்புசாமி, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் இராஜ்கமல் ஆகியோர் உடனிருந்தனர். கோபி மாவட்ட சந்திப்புகளை முடித்துக் கொண்டு பயணக் குழு 7 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடைந்தது.
மேட்டுப்பாளையம்
திராவிடர் கழக மேட்டுப்பாளையம் கழக மாவட்ட விடுதலை விளைச்சல் மற்றும் தோழர்கள் சந்திப்புக் கூட்டம் மாவட்டத் தலைவர் வேலுச்சாமி அலுவலகத்தில் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 88 ஆம் ஆண்டு பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில் குருதிக்கொடை முகாம் நடத்து தல், மரக்கன்று நடுதல், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவளிப்பது எனத் தீர்மானிக்கப்பட்து. இதனையடுத்து, மாவட்டத் தலைவர் வேலுச்சாமி, மாவட்டச் செயலாளர் அரங்கசாமி ஆகியோர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களிடம் விடுதலை சந்தாவுக்குரிய தொகை ரூ. 12,000 வழங்கினர். அப்போது, அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், நகரத் தலைவர் பழனிச்சாமி, நகரச் செயலாளர் சந்திரன், அரங்கசாமி, பத்மநாபன், செல்வ ராஜ், மணி, முருகேசன், இராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அக்.30,31 ஆம் தேதி விடுதலை விளைச்சல் பயணம் தோழர்கள் சந்திப்பு கூட்டமாக, இளைஞரணி கலந்துறவாடல் கூட்டங்கள் என மேற்கு மாவட்டங்கள் புத்துணர்வை ஊட்டியது.
இளைஞரணி புதிய பொறுப்பாளர்கள்:
தாராபுரம் மாவட்டம்
மாவட்ட இளைஞரணி செயலாளர் - தாராபுரம் முனீஸ்வரன்
மடத்துக்குளம் ஒன்றிய கழகப் பொறுப்பாளர்கள் :
அமைப்பாளர் - செல்வராசு
துணைச் செயலாளர் - இராமசாமி
கோபிச்செட்டிப்பாளையம் மாவட்ட இளைஞரணி :
தலைவர் - ப.வெற்றிவேல்
செயலாளர் - செ.பிரசாந்த்குமார்
அமைப்பாளர் - மதியழகன்
துணைத் தலைவர் - மு.இராஜ்கமல்
துணைத் தலைவர் - கு.இரவிக்குமார்.
தொகுப்பு: த.சீ.இளந்திரையன்,
மாநில இளைஞரணி செயலாளர்