கரோனாவுடன் பரவும் டெங்கு - பொதுமக்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை!

சென்னை, நவ.20 தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. ஒருபக்கம் கரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், மழைக்கால நோய்களான டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா உள்பட பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இந்த நோய்ப் பரவலை கட்டுப்படுத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, டெங்கு மற்றும் கரோனாவிற்கு காய்ச்சல், சளி, இருமல் என்று ஒரே அறிகுறியாக உள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Comments