தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு

சென்னை, நவ. 21- தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவல் தெரிவித்துள்ளது. மாலத்தீவு அருகே ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments