திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது தவனையாக 21 விடுதலை சந்தாக்களை சேகரித்து ரூ.37,800 கழகப் பொதுச் செயலாளரிடம் வழங்கினர்

திருவாரூர் மாவட்டத்தில் 23-11-2020 அன்று கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் தலைமையில், திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன், மாவட்ட செயலாளர் வீர. கோவிந்தராசு, கொரடாச்சேரி ஒன்றியத் தலைவர் ஏகாம்பரம் கழகப் பேச்சாளர் இராம. அன்பழகன் பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் அரவிந்தன் ஆகியோர் விடுதலை சந்தா சேர்ப்பு பணியில் ஈடுபட்டனர்.


மதியம் 9.30 மணிக்கு கமலாபுரத்தில் தொடங்கி பருத் தியூர், எருக்காட்டூர், கண்கொடுத்தவனிதம், விடையபுரம், அம்மையப்பன், சோழங்கநல்லூர், திருவாதிரைமங்கலம், ஆகிய ஊர்களுக்குச் சென்று இரவு 7.00 மணிக்கு திருவாரூர் நகரத்தில் சந்தா திரட்டும் பணி  முடிவடைந்தது இரண்டாவது தவணையாக. 21 சந்தாக்கள் சேகரித்து ரூ.37,800 வழங்கினர். அனைத்து பகுதிகளிலும் மாவட்ட ஒன்றிய நகர, கிளைக்கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் அன்புடன் வரவேற்று சந்தாக் களை வழங்கினர். சந்தித்த அனைத்து கட்சி நண்பர்களும் இன் முகத்துடன் சந்தாக்களை வழங்கினர்.


Comments