2015இல் நிகழ்ந்த வெள்ள பாதிப்பில் இருந்து அரசு அதிகாரிகள் பாடம் கற்கவில்லை

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்சென்னை, நவ. 25-  கடந்த 2015ஆம் ஆண்டில் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் பாதிப்பை அனுபவித்த போதும் இன்று வரை அதில் இருந்து அதிகாரிகள் பாடம் கற்கவில்லை என்று விதிமீறல் கட்டிடங்களை அகற்ற கோரிய வழக்கின்போது அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த வழக்கு ரைஞர் ருக்மாங்கதன் மனுதாக்கல் செய் திருந்தார். அதில் விதிமீறல் கட்டிடங்கள் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்க வில்லை. மாநகராட்சி அதிகாரிகள் குறிப்பிட்டு தேர்ந்தெடுத்த கட்டிடங் களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த பின் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வரு கிறது. எனவே, சட்ட விரோத கட்டு மானங்களுக்கு எதிராக எடுத்த நட வடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.


இந்த மனு நீதிபதிகள் சத்யநாரா யணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, சட்ட விரோத கட்டடங்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் உள்ளதா கவும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதி இது தொடர்பாக தலைமைச் செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாக துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்தார். மேலும், சென்னையில் 5ஆவது மண்டலத்தில் மட்டும் இவ்வளவு விதிமீறல்கள் என்றால், தமிழகம் முழுவதும் இதே நிலை தான் இருக்கும் எனவும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அரசுத் துறை தலைவர்கள் கண்காணிக்கத் தவறிவிட்டதையே காட்டுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்கு பிறகும் பாடம் கற்கவில்லை என்று நீதிபதிகள் குற்றஞ்சாட்டினர். மேலும், மனு தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர், 5 வது மண்டல உதவி ஆணையர் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


 5,574 விதிமீறல் கட்டிடம்


மனுதாரர் தன் மனுவில், தகவல் அறி யும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி மாநகராட்சியின் 5வது மண்டலமான ராயபுரத்தில் மட்டும் 5,574 விதிமீறல் கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவே சென்னை முழுவதும் 75 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை விதிமீறல் கட்டிடங்கள் இருக்கலாம் என்று தெரிவித்து இருந் தார்.


 


 


 


Comments