பீகார் தேர்தலும் - 200 டன் மருத்துவக் கழிவுகளும்!

பாட்னா, நவ. 17- பீகார் சட்டசபைத் தேர்தல் மூலம் 200 டன்களுக்கும் குறைவான மருத்துவக் கழிவுகள் சேர்ந்து உள்ளதாகத் தேர்தல் அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர்.


கையுறைகள், முகக்கவசங் கள் மற்றும் பயன்படுத்தப் பட்ட சானிடைசர் பாட்டில் கள் ஆகிய வகைப்பாடுகளில் இந்த மருத்துவக் கழிவுகள் சேர்ந்துள்ளதாகக் கூறப்படு கிறது.


கரோனா பரவலின் மத் தியில் நடைபெற்ற இத்தேர் தலைப் பாதுகாப்புடன் நடத்துவதற்காக, 18 லட்சம் முக கேடயங்கள், 70 லட்சம் முகக் கவசங்கள், 5.4 லட்சம் ஒருமுறை பயன்பாட்டு ரப்பர் கையுறைகள் மற்றும் 7.21 கோடி ‘ஒரு கை‘ ஒருமுறை பயன்பாட்டு பாலித்தீன் கையு றைகள் ஆகியவற்றைத் தருவி த்தது தேர்தல் ஆணையம்.


மேலும், 100 மில்லி மற்றும் 500 மில்லி அளவுகளில், 29 லட்சம் சானிடைசர் பாட் டில்களும் வரவழைக்கப்பட் டன. மேலும், தேர்தலுக்கு முந்தைய நாள், தேர்தல் நடைபெறும் அறைகள் சுத்தம் செய்யப்பட்டதோடு, தேர்தல் நாளன்று மூன்று முறை சுத்தம் செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும், பயன்படுத்தப் பட்ட பாதுகாப்பு பொருட் களை முறையாக அப்புறப் படுத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. அனைத்து மாவட்டங்களி லும் மருத்துவக் கழிவுகள் கழிவு அகற்றும் ஏஜென்சிளும் அமைக்கப்பட்டிருந்தன என்று கூறப்பட்டுள்ளது.


பீகார் போன்ற வளர்ச்சி அடையாத மாநிலங்களில் மருத்துவக் கழிவுகளைக் கையாள்வது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு இல்லை. இதனால் நிலம், மற்றும் நீர் நிலை எங்கும் முககவசம் சிதறிக்கிடக்கிறது, இவற்றைப் புற்களோடு மாடு கள் தின்றுவிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது,  முகவசம் பல்வேறு ஆபத்தான நுண்ணு யிர்களைப் பிற உயிரினங்க ளுக்குக் கடத்திவிடும் ஆபத்து உள்ளது. அதே நேரத்தில் நீரில் இது கலக்கும் போது  நீர் மாசு ஏற்பட்டும் ஆபத்து உள்ளது, பீகாரில் நிலத்தடி நீர் வளம் அதிகம் உள்ளதால் நிலத்தில் வீசப்படும் முககவ சத்தின் மூலம் நிலத்தடி நீரி லும் நுண்ணுயிர்கள் பரவுவ தற்குப் பெரிதும் வாய்ப்பு உள் ளது. தற்போது மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை தாமதமாகி வரு கிறது புதிய அரசு அமைந்து அது திட்டங்களைச் செயல் படுத்தக் குறைந்தது ஒரு மாத காலமாகவது ஆகும் அது வரை மருத்துவக் கழிவுகள் நிலம் நீர் இரண்டையும் மாசு படுத்திவிடும் என்று சூழியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Comments