குமரிக்கடலில் காற்றழுத்தம் நீடிப்பு தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை

வானிலை ஆய்வு மய்யம் தகவல்



சென்னை, நவ. 19- குமரிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத் தம் அதே இடத்தில் நீடித்து வருவதால், தென் தமிழகம் மற்றும் வட மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்து உள்ளது.


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதன் கார ணமாக குமரிக் கடல் பகுதி யில் 2 நாட்களுக்கு முன்பு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி, அது வலுப் பெற்று காற்றழுத்தமாக மாறி யுள்ளது. அந்த காற்றழுத்தம், குமரிக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதி, தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிவரை பரவியுள்ளது. இதனால், தென் மாவட் டங் களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகி றது. அதனால் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வருகின் றன. அருவிகளிலும் மழை நீர் கொட்டி வருகிறது. 


இதன் தொடர்ச்சியாக நேற்றும் தென் தமிழகத்தில் பல இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்ச மாக காயல்பட்டினத்தில் 210 மிமீ மழை பெய்துள்ளது. பரமக்குடியில் 130மிமீ, பாப நாசம் 120 மிமீ, மழை பெய் துள்ளது. அதேபோல  வட மாவட்டங்களில் சில இடங் களில் லேசானது முதல் மித மான மழை பெய்துள்ளது. தற்போது குமரிக்கடல் பகுதி யில் நிலை கொண்டுள்ள காற் றழுத்தம் மேலும் வலுப்பெ றும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியிலும் பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் பலத்த சூறாவளிக் காற்று வீசும் என்பதால் குமரிக்கடல் மற்றும் தென் கிழக்கு அரபிக் கடல்பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம்.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் பொதுவாக இன்று மேக மூட்டம் காணப்படும். ஒரு சில இடங்களில் இரவு நேரங் களில் இடியுடன் மழை பெய் யும். காலை நேரத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.


Comments