டிச.2இல் தமிழர் தலைவரின் 88ஆவது பிறந்த நாளை சிறப்புடன் கொண்டாட முடிவு

காரைக்கால் மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்காரைக்கால், நவ. 23- காரைக்கால் மண்டல திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 22-11-2020 ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணியளவில் காரைக்காலில் மண்டல செயலாளர் இல்லத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு காரைக்கால் மண் டல செயலாளர் குரு. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச் சிக்கு காரைக்கால் மண்டல இளை ஞரணி செயலாளர் மு.பெரியார் கணபதி வரவேற்புரையாற்றினார். மண்டல துணை தலைவர் இரா.ஜெயபாலன், பெரியார் பெருந் தொண்டர் பெரியார் முரசு ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.


இந்த நிகழ்ச்சியில் காரைக்கால் மண்டல துணைத் தலைவர் ஆர் ஜெயபாலன். காரைக்கால் மண்டல இளைஞரணி தலைவர் பெரியார் கணபதி, புதுச்சேரி மாநில பகுத்தறி வாளர் கழக தோழர் மூலக்குளம் தமிழ்ச்செல்வன், பெரியார் முரசு  மற்றும் காரைக்கால் மண்டல செய லாளர் குரு.கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் கருத்துரை வழங்கினர்.


மேலும் இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் மண்டல இளைஞரணி துணை செயலாளர் நாத்திக பைசல், சுதர்சன் இளைஞரணி தோழர்கள் கார்த்திகேசன் ஸ்டாலின் தேவேந் திரன் ரா.குணபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மண்டல மாணவர் கழகத் தலைவர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.


நிகழ்ச்சியில் பின்வரும் தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது  1. மறைந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் காரைக்கால் மண் டல தலைவர் ஜ..கே. நாராயணசாமி அவர்கள் மறைவையொட்டி அவ ருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் கூட்டத்தில் ஒரு நிமிடம் அமைதி காக்கப்பட்டது.

  2. வருகிற நவம்பர் 26 ஆம் தேதி சட்ட எரிப்பு நாளினை ஒட்டி காரைக் கால் பகுதியில் கலந்து கொண்டு சிறை சென்ற பெரியார் தொண்டர் பேட்டை ராஜகோபால் அவர்களுக் கும் காரைக்கால் பெரியார் பெருந் தொண்டர்பெரியார் முரசு அவர் களுக்கும் சிறப்பு செய்து பாராட்டு தெரிவிப்பது என முடிவு செய்யப் பட்டது.

  3. வருகிற டிசம்பர் -2 தேதி தமிழர் தலைவர் பிறந்த நாளினை முன்னிட்டு கழகத்தின் சார்பாக இனிப்புகள் வழங்கி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு நலத் திட்டங்களை வழங்கி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.

  4. டிசம்பர் 6ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்துவது எனவும்

  5. டிசம்பர் 24ஆம் தேதி அய்யா தந்தை பெரியார் நினைவுநாள் நிகழ்ச்சியை மிக சிறப்பாக நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப் பிக்க வேண்டுமென இக்கூட்டத்தின் மூலமாக கேட்டுக் கொள்ளப்பட் டது.


Comments