நிதிஷ்குமாரின் பரிதாப நிலை


பாட்னா,நவ.15  பீகார் மாநிலத்தில் சுழற்சி முறையில் முதல்வர் பதவிவேண்டும் எனப் பீகார் பாஜகவினர் மாநிலத் தலைமைக்கு நெருக்கடி கொடுக் கத் துவங்கிவிட்டனர்.


 பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றுள்ளது. “தங்கள் கூட்டணி வென்றால் நிதிஷ்குமார் தான் மீண்டும் முதல்-அமைச்சர்” எனத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


 ஆனால், இந்த தேர்தலில் முதல்அமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளம் கட்சி, பா.ஜ.க.வை விட குறைவான இடங்களில் வென்றுள்ளதால், முதல்வர் பதவியை பா.ஜ.க. கேட்கலாம் எனச் செய்திகள் பரவி உள்ளன.


 தற்போது மாநில பாஜகவினர் மூன்றாவது இடத்தைப் பிடித்த ஒரு கட்சி முதல்வரை அறிவிப்பது அவர்கள் விருப்பம் இருந்தாலும் கூட்டணி தர்மம் காரணமாகவும் தேசியத் தலை வர்களின் வாக்குறுதிப் படியும் நாங்கள் நிதிஷ்குமாருக்கு முதல்வர் பதவி விட்டுக் கொடுப்போம் அதே போல் வரும் காலங்களில் சுழற்சி முறை முதல்வர் பதவி குறித்தும் மாநி லத் தலைமையிடம் பேசியுள் ளோம் என்று கூறி மாநில பாஜக தலைமையிடம் துணை முதல்வர் சுஷில்மோடிக்கு நிதிஷ்குமார் முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தால் நாங்கள் மகிழ் வோம் என்றும் கூறியுள்ளனர்.


 பா.ஜ.க. பொதுச்செயலாளரும், பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்ட ணியின் வெற்றிக்கு வியூகம் அமைத் தவருமான உபேந்திர யாதவிடம் கேட்டபோது “நிதிஷ்குமார் தான் முதல்-அமைச்சர் என உறுதியாக நாங்கள் சொல்லி விட்டோம். பா.ஜக.வினர் ஒழுக்க மானவர்கள், அதே நேரத்தில் அவர்கள் அதிகா ரத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பு கின்றனர்.இதில் இருவருக்குமே  எந்த கருத்து வேறுபாடும் கிடை யாது” என்று பதில் அளித்தார்.


 இதனால் நிதீஷ் குமார் கிட்டத்தட்ட முதல்வராக இருந்தும் பாஜகவினரின் அனைத்து சைகைக்கும் ஆட்டம் போடும் பதுமையாக இருக்கப் போகிறார் என்பது உறுதியா கிறது எனப் பீகார் மாநிலத் தேர்தலுக்குப் பிறகான மாற்றங் களைக் கவனிக்கும் ஊடகவி யலாளர்களின் யூகம்.


Comments