தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை உயர்த்த அனுமதி இல்லை : நிர்ணய குழு அதிரடி உத்தரவு

சென்னை,நவ.5 தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் விவரம் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அதிகபட்சமாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப் புக்கு ஒரு ஆண்டுக்கு 13,610 வசூலிக்கப்படுகிறது.


அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் பி.டி.எஸ். படிக்கு 11,610 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து ராஜா முத்தையா மருத் துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 4 லட்சம், ஈரோடு பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 3.85 லட்சம், கே.கே.நகர் இ.எஸ்.அய். மருத்துவக் கல்லூரியில் எம்.பி.


பி.எஸ். படிப்புக்கு 1 லட்சம், ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவப் படிப்புக்கு 2.50 லட்சமும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில்  தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல் லூரிகளின் கட்டணத்தை உயர்த்த கோரி தமிழ்நாடு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சங்கத்தின் சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் கட்டணம் நிர்ணய குழுவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 2017 - 2018ஆம் ஆண்டில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இது நிர்ணயம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட காரணத்தால் இந்த ஆண்டு கட் டணத்தை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக் கப்பட்டது. இது தொடர்பாக கல் விக் கட்டண நிர்ணயம் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி வெங் கட்ராமன் தலைமையில் விசாரணை நடைபெற்றது.


இந்த முடிவில் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக  இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால் என்ஆர்அய் பிரிவில் சேர்ப்ப வர்களுக்கான கட்டணம் 20.50 லட்சத்தில் இருந்து 23.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி தனியார் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு  3.85 லட்சம் முதல்  4 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆண்டுக்கு 12.50 லட்சமும், என்.ஆர்.அய். மாணவர்களுக்கு 23.50 லட்சமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர் பாக அறிவிப்பு tஸீலீமீணீறீtலீ.tஸீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவக் கல் லூரிகள் கட்டண விவரம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் ரூ.13,610, அரசு மருத்துவக் கல் லூரிகளில் பி.டி.எஸ் ரூ.11,610, தனியார் கல்லூரி (அரசு ஒதுக்கீட்டு) எம்பிபிஎஸ் ரூ.3.85லட்சம், தனியார் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் ரூ.12.50லட்சம், என்.ஆர்.அய். மாண வர்களுக்கு எம்பிபிஎஸ் ரூ.23.50 லட்சம் என மருத்துவக் கல்லூரி களில் கட்டணமாக உள்ளது.


Comments