டில்லி ஜவகர்லால் நேரு பல்கலை  கழகத்தில் விவேகானந்தர் சிலை : செலவினத் தகவல்களை அளிக்க பல்கலைக்கழகம் மறுப்பு


புதுடில்லி,நவ.14, டில்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில்  விவேகானந்தரின் முழு உருவச் சிலையை பிரதமர் மோடி, நவம்பர் 12 ஆம் தேதி திறந்து வைத்தார். ஆனால் இதனை அங்குள்ள முக்கிய மாணவர் அமைப்புகள் கடுமையாக எதிர்த்ததோடு, #Go Back Modi! கோ பேக் மோடி என்ற ஹேஸ் டேக்கை சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்தன. இந்த சிலை மற்றும் அதனை சுற்றி உருவாக்கப்பட்டுள்ள பூங்காவால், பல லட்சம் ரூபாய் வீண் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை வைத்து சில ஏழை மாணவர்களுக்கு உதவி தொகை அளித்திருக்கலாம் என மாணவர் அமைப்பினர் கூறி வருகின்றனர்.


மேலும் இந்த சிலை மற்றும் பூங்கா அமைக்க எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டது என்ற தகவலை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்ட போது, அதனை தரவும், பல்கலைக்கழகம் மற்றும் மத்திய அரசு தரப்பு மறுத்துள்ளதும் சர்ச்சைக்கு விதையிட்டுள்ளது.


ஏற்கெனவே 3000 கோடி ரூபாயில் படேல் சிலை அமைக்கப்பட்டது, வீண் செலவு என மத்திய அரசுக்கு எதிராக அதிருப்தி எழுப்பப்பட்ட நிலையில், விவேகானந்தர் சிலைக்கான செலவுக் கணக்கை காட்டினால், அதனை கோடிட்டு காட்டி, எதிர்க்கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கி விடுவார்கள் என்பதால், இந்த செலவு கணக்கை அரசுத் தரப்பு தர மறுப்பதாக கூறப்படுகிறது.


மாணவ அமைப்பினர் சிலர் விவே கானந்தர் சிலையுடன் சேர்த்து, நாட்டின் அரசமைப்பு சட்டத்தை உருவாக்கிய, டாக்டர் அம்பேத்கரின் சிலையையும் நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், அந்த கோரிக்கையை பல்கலைக்கழகம் நிராகரித்துள்ளதாக கூறப் படுகிறது.


ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை, மாணவர் அமைப்புகள் மிகவும் பலமாக, தீவிரமாக, சுறுசுறுப்பாக இயங்கும் பல்கலைக் கழகம் ஆகும். இடது சாரி மாணவர் அமைப்புகளின் கை இங்கு எப்போதும் ஓங்கியே காணப்படுகிறது. பல இடதுசாரித் தலைவர்களும் இந்த பல்கலைக்கழகத்தில் இருந்து வந்தவர்கள் ஆவர். இதனை ஒடுக்க, அண்மை ஆண்டு களாக, பாஜகவின் ஏபிவிபி தீவிரமாக களமாடி வருகிறது. இதே போல், காங் கிரஸ் மாணவர் அமைப்பான என்எஸ்யூ, கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா ஆகிய மாணவர் அமைப்புகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.


Comments