பெரியார் கேட்கும் கேள்வி! (173)


ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் தேர்ந் தெடுக்கும் உரிமை இந்த நாட்டில் அறவே இல்லை. யாரோ தெருவில் போகும் பார்ப்பானைக் கூப்பிட்டு பொருத்தம் பார்க்கச் சொன்னால், அவனுக்கு மணமக் களைப் பற்றி என்ன தெரியும், அண்ணன், தங்கை ஆகிய இருவர் சாதகங்களை கொடுத்தால், ஒருவருக்கொருவர் கணவன் மனைவி ஆவதற்குப் பொருத்தம் சொல்லுவான். மனிதனுக்கும் நாய்க் குட்டிக்கும் கூட ஜாதகத்தில் பொருத்தம் காணலாம். ஜாதகம் இல்லையென்றால், பெயரைச் சொல்லச் சொல்லிப் பொருத்தம் பார்ப்பான். அதற்கு மேல் பல்லி, கருடன் ஆகியவைகளின் ஒப்புதல் வேண்டும். வாழ்க்கையையே பிணைக்கக் கூடிய திரு மணத்தில், இவ்வளவு பேதமை அநேக நல்ல பொருத் தங்கள் என்பவை பெண்ணின் முதுகுக்கும் கணவனின் கைத்தடிக்கும் ஓயாத பொருத்தமாக முடிகின்றது. வரும் காலத்தில் வாலிபர்களுக்கும் பெண்களுக்கும் உரிமை தரவேண்டும். இல்லையென்றால் உரிமையுடன் இருக்கப் போகும் அவர்கள் நம் தடைகளை விலக்கி முன்னேறு வார்கள். எனவே முதலிலேயே உரிமையளித்து விடுவது நல்லதல்லவா?


- தந்தை பெரியார், “குடிஅரசு”, 22.07.1944


‘மணியோசை’


Comments