பெரியார் கேட்கும் கேள்வி! (173)


பகுத்தறிவு என்று சொல்லுவதும் மாறி, மாறி வருவ தாகும். இன்று நாம் எவைகளை அறிவுக்குப் பொறுத்த மானவை என எண்ணுகிறோமோ, அவை நாளைக்கு மூடப்பழக்கவழக்கங்கள் என தள்ளப்படும். நாம் கூட பல பொருள்களை ‘ஏன் மகான்கள்’ என்று புகழப்படு பவர்கள் சொன்னவற்றையே, பழைய கருத்துக்களெனத் தள்ளிவிடவில்லையா? அது போலத்தான், நமது பின்னோர்கள் என்னைக் குறித்துக்கூட “ஓர் காலத்தில் இராமசாமி என்ற மூடக்கொள்கைக்காரன் இருந்தான்” என்று சொல்லுவார்கள். அது இயற்கை; மாற்றத்தின் அறிகுறி; காலத்தின் சின்னம். எனவே பழைய காலத்தைச் சேர்ந்தவை என்பதற்காக நாம் குறை கூறவில்லை. அவர் கள் காலத்துக்கு அவர்கள் செய்தது சரி என்பதனாலும், அப்போது அவ்வளவுதான் முடிந்தது என்பதனாலும், இன்று மாறித்தான் ஆகவேண்டும் என்பது அவசியமான தல்லவா?


- தந்தை பெரியார், “குடிஅரசு”, 22.07.1944


‘மணியோசை’


Comments