பெரியார் கேட்கும் கேள்வி! (171)

                                                                                          கந்த புராணம் என்பதும் வைணவ புராணங்களைவிட முந்தியதாகவே இருக்க வேண்டும். ஏனெனில் கந்தனின் உற்பத்தியை ஆபாசமான முறையில் கற்பிக்கப்பட்டிருக் கிருக்கிறது. ஆயிரம் தேவ வருஷம் (அதாவது பல யுக காலம்) சிவன் புணர்ந்ததால் ஏற்பட்டான் என்றும், இந்திரியத்தை ஆற்றில் விட்டதால் ஏற்பட்டான் என்றும், அந்த... மிஞ்சின இந்திரியம்தான் என்றும், நெற்றிப் பொறியில் தோன்றினான் என்றும் மற்றும் பலவித ஆபாசமானதும், அசம்பாவிதமானதும் சிறிதும் அறி வற்றதுமான வழியில் உற்பத்தியானதாக சித்திரிக்கப் பட்டிருக்கின்றது. கந்த புராணத்தில் பாத்திரங்கள் அக்கினி முகன், சிங்கமுகன், ஆட் டுமுகன் முதலிய இயற்கைக்கு மாறுபட்ட வைகள். யுத்த முறை இந்திரன் குயிலாக மாறி னான். சூரன் சக்ரவாகப்புள் குருவியாக மாறினான். இந்திரன் மயிலாக வந்தான். தீ, காற்று முதலிய உருவுடன் தோன்றினான், வேலால் குத்துதல், சேவலாக ஆகிவிடுதல் முதலியவை எல்லாம் காட்டுமிராண்டி காலத்திய கற்பனை யேயாகும். இந்திரனுடைய நிலைமையும், இரா மாயணத்தில் காட்டப்பட்டிருக்கும் இந்திரனைவிட காட்டுமிராண்டித் தன்மை கொண்டதாகவும் சித்திரிக் கப்பட்டுள்ளதால் - இவைகளின் காட்டுமிராண்டித்தன தன்மையைக் கணக்கில் கொண்டும் வழிபாடு செய்வது அறிவுடமையா?


- தந்தை பெரியார், “குடிஅரசு”, 01.07.1944


‘மணியோசை’


Comments