பெரியார் கேட்கும் கேள்வி! (170)


சிவன் கற்பிதம் மிக்க பழமையான காட்டுமி ராண்டி காலத்தியதாக இருக்கிறது. அதாவது தலை - சடையாகவும், ஆடை - மிருகத்தின் தோலாகவும், அணி (நகை), பாம்புகள் - எலும்புகளாகவும், புஷ்பம் - கொன்றை எருக்கம் பூக்களாகவும், பாத்திரம் - மண்டை ஓடு, ஆகாரம் - தேன், தினைமாவு கொழுக்கட்டையாகவும், ஆயுதம் - 1வது மழு, 2வது சூலம், இடம் - மலை, விளையாடுவது - சுடலை, பூசிக்கொள்வது - சாம்பல், ரூபம் (சாயல்) - அகோரம், வாகனம் - மாடு, குணம் - வெளிப்படையான இம்சை, நட னம் - காட்டுமிராண்டி ஆட்டம், சங்கீதக்கருவி - உடுக்கை, பெண் ஜாதி இதுபோன்றே, கோர ரூபமுள்ள காளி, அவள் வாகனம் - சிங்கம்; பிள்ளைகள் ஒன்றுக்கு ஆறுமுகம், மற் றொன்றுக்கு யானைத்தலை விகார ரூபம். இந்தமாதிரியாக காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்றபடியாகவும், காட்டு மிராண்டி காலத்திய எண்ணங்களின்படியாகவும் கற்பிக் கப்பட்டிருக்கிறபடியால் சிவன் தான் முதலாவதாக சித் திரிக்கப்பட்ட கடவு ளாக இருக்க வேண்டும் என்பதற்கு விளக்கம் தேவையா?


- தந்தை பெரியார், “குடிஅரசு”, 01.07.1944


‘மணியோசை’


Comments