பெரியார் கேட்கும் கேள்வி! (164)


ஒரு மதத்தினரை ஒரு மதத்தினர் தாழ்வாக மதிப்பதும், துன்பப்படுத்துவதும், ஒரு ஜாதியினரை ஒரு ஜாதியினர் கொடுமைப்படுத்துவதும், அடிமைப்படுத்துவதும், அடக்கியாள்வதும் ஆகிய தற்போது நிகழும் காரியங்கள் அடியோடு அழிய வேண்டும்; ஒரு மதத்தினர்க்கு ஒரு மதத்தினர் - ஒரு ஜாதியினர்க்கு ஒரு ஜாதியினர்; எந்த வகையிலும் குறையாத அதிகாரம் படைத்தவராயும், கல்வியறிவு பெற்றவராயும், செல்வம் பெற்றவராயும், சுதந்திரம் பெற்றவராயும் ஆகி விட்டால் மதக் கொடு மைகளும், ஜாதிக் கொடுமைகளும் மாண்டொழிந்து போகுமல்லவா?


- தந்தை பெரியார், “குடிஅரசு”, தலையங்கம் 28.8.1932


‘மணியோசை’


Comments